மக்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி இருக்கின்றார்கள் - சரத் பொன்சேகா

க்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி இருப்பதாக ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

வலஸ்முல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் அவர் இதனைக் கூறியுள்ளார்.சரத் பொன்சேகா,

''ஊழல் மிகுந்த அரசியல்வாதிகள் மக்கள் குறித்து கவனம் கொள்ளாது தம்மைப் பற்றி மாத்திரம் சிந்திக்கின்றார்கள். மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகளை வழங்கினார்கள். 

மக்களை எமாற்றினார்கள். அதனால் நலன்புரி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. எனவே மக்கள் இன்று எதிர்காலம் குறித்து நம்பிக்கை இன்றி இருக்கின்றனர். 

இன்றைய நாளைப் பற்றி மாத்திரமே சிந்திக்கின்றனர். நாளைய நாள் குறித்து சிந்திப்பதில்லை. எனவே மக்கள் எதிர்காலம் குறித்த நம்பிக்கையின்றி இருக்கின்றனர். 

அரசியல்வாதிகள் தொடர்ந்தும் சுகபோகத்தை அனுபவிக்கின்றனர். 100 கிலோமீற்றர் தூரம் கொண்ட அதிவேக வீதி காலிவரை நிர்மாணிக்கப்பட்டது. பின்னர் அதற்கு செலவிட்ட தொகையைில் அரைவாசித் தொகை 2ஆம் கட்டமான 26 கிலோமீற்றருக்கு செலவிடப்பட்டுள்ளது. 

காலியிலிருந்து மா்ததறை வரை அதிவேக வீதியை நிர்மாணிப்பதற்கு காலிவரை செலவிடப்பட்டதைப் போன்று ஐந்து மடங்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது தான் அதிவேக வீதி விளையாட்டு''.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :