கொலம்பிய நாட்டில் உள்ள Cali என்ற நகரம் அந்நாட்டின் மூன்றாவது பெரிய நகரம் ஆகும். அந்த நகரத்தில் உள்ள La Barra de la 44 club என்ற இரவு விடுதியில் நேற்று இரவு 9 மணிக்கு 8 பேர் அடங்கிய கும்பல் ஒன்று வந்தது.
அவர்களை தொடர்ந்து வந்த 20 வயது இளைஞன் ஒருவன், திடீரென தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து அந்த எட்டு பேர்களையும் சரமாரியாக சுட்டுத்தள்ளினான்.
இந்த துப்பாக்கி சுடு சம்பவத்தில் அந்த இரவு விடுதியின் பணியாட்கள் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.தான் சுட்ட எட்டுபேர்களின் உடல்கள் கீழே விழும்வரை சரமாரியாக சுட்ட அந்த இளைஞன் தப்பிக்க எவ்வித முயற்சியும் செய்யவில்லை. போலீஸ் வரும்வரை காத்திருந்து, அவர்களிடம் எவ்வித எதிர்ப்பையும் காட்டாமல் சரண் அடைந்தான். அவனை கைது செய்த கொலம்பிய போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
விசாரணையில் அந்த இளைஞனின் பெயர் Johan Alexander Mosquera என்றும் முன்பகை காரணமாக அந்த எட்டுபேர்களையும் அவன் சுட்டு கொன்றுள்ளான் என்றும் தெரிய வந்துள்ளது. திங்கட்கிழமை அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த இருப்பதாக போலீஸார் தெரிவித்தனர்.

0 comments :
Post a Comment