-எஸ்.அஷ்ரப்கான்-
அகில இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனம் நடாத்தும் எப்.ஏ கிண்ணம்-2013 உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின்தொடராக கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்திற்கும்முல்லைத்தீவுசென்ஜூட்ஸ்விளையாட்டுக்கழகத்திற்குமிடையிலான போட்டி முல்லைத்தீவு பொது விளையாட்டு மைதானத்தில் நேற்று ஞாயிற்றக்கிழமை (10) இடம்பெற்றது.
இந்தப் போட்டியில் கல்முனை பிர்லியன்ட் கழகம் 2-1 என்ற கோல் அடிப்படையில் வெற்றி பெற்று இரண்டாம் சுற்றுக்குதெரிவாகியுள்ளது.
அதன் அடிப்படையில் இரண்டாம் சுற்றுப் போட்டி கல்முனை சந்தங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில்எதிர்வரும் 17ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை நடை பெறவுள்ளது.
இந்த இரண்டாவது சுற்றுப் போட்டியில் கல்முனைபிர்லியன் விளையாட்டுக் கழகமும் முல்லைத்தீவு உதய சூரியன் விளையாட்டுக்கழகமும் மோதவிருப்பதாககல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக்கழகத்தின் பொதுச் செயலாளர் எஸ்.ரீ.பஸ்வக் தெரிவித்துள்ளார்.


0 comments :
Post a Comment