யுத்தக் குற்றச் செயலை ஆதாரத்துடன் சமர்ப்பியுங்கள் அல்லது வாயை மூடிக்கொல்லுங்கள் - கோதபாய

யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் அல்லது வாயை மூடிக்கொண்டிருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை சீர்குலைக்கும் தீவிர முனைப்பில் பிரித்தானிய தமிழ்ப் புலம்பெயர் அமைப்பு ஒன்று ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

க்ளோபல் தமிழ் போரம், பிரித்தானிய தமிழர் பேரவை மற்றும் இனச் சுத்திகரிப்பிற்கு எதிரான தமிழர் அமைப்பு ஆகியன பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூனை சந்தித்தமை தொடர்பில் அவர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார். அமர்வுகளை புறக்கணிக்குமாறு புலி ஆதரவு தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் பிரதமரை கோரி வருவதாகத் தெரிவித்துள்ளார்.

யுத்தக் குற்றச் செயல் குறித்து செனல்4 ஊடகம் ஆவணப்படங்களை வெளியி;ட்டு வருவதாகவும், மெய்யாகவே ஆதாரங்கள் இருந்தால் அவற்றை பிரித்தானியா அல்லது வேறும் ஐரோப்பிய நீதிமன்றமொன்றில் சமர்ப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். 

அல்லது ஜெனீவா அல்லது ஹேக்கில் உள்ள சர்வதேச நீதிமன்றங்களில் ஆதராங்களுடன் குற்றச்சாட்டுக்களை சமர்ப்பிக்க முடியும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால் வாய்களை மூடிக் கொண்டிருக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் பொதுச் செயலாளர் பான் கீ மூனினால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவின் அறிக்கையில் இலங்கையில் குற்றச் செயல்கள் இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஆதாரங்கள் பற்றிய தகவல்களை 2031ம் ஆண்டு வரையில் வெளியிட முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மெய்யாகவே ஆதாரங்கள் இருந்தால் அவற்றை காலம் தாழ்த்தாது சமர்ப்பிக்க முடியும் என பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :