பிலிப்பைன்ஸை தாக்கிய ஹையான் புயலால் வீதிகள் மற்றும் விமான நிலையங்கள் சேதம் - படங்கள்

 பிலிப்பைன்ஸை கடுமையாக தாக்கிய ஹையான் புயலால் வீதிகள் மற்றும் விமான நிலையங்கள் சேதம் அடைந்திருப்பதால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டிருப்பதோடு நிவாரண நடவடிக்கைகளிலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு பிலிப்பைன்ஸை கடந்த வெள்ளிக்கிழமை தாக்கிய புயல் காரணமாக ஆயிரக்கணக்கானோர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புயல் காரணமாக கடல் நீருடன் பாரிய கப்பல்களும் நாட்டுக்குள் அடித்து வரப்பட்டதோடு கட்டிடங்கள், மரங்கள்தரைமட்டமாகியுள்ளன. இதனால் மின்சாரம், வீதிப் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப் பட்டுள்ளது.

10,000 க்கும் அதிகமானவர்கள் பலியாகியிருக்கலாம் என பிலிப்பைன்ஸ் நிர்வாகம் கணித்துள்ளது. கொல்லப்பட்டோரது உடல்கள் தெருக்களிலும், பாதையோரங்களிலும் சிதறிக் கிடக்கின்றன. புயல் தாக்குதலில் பிலிப்பைன்ஸின் 36 மாகாணங்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றன. சுமார் 50 இலட்சம் பேர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். உறவினர்களையும் இழந்துள்ளனர். இவர்களை தேடி தெருக்களில் அலைந்து திரிகின்றனர். எங்கு பார்த்தாலும் அழுகுரலும், சோகமும் எதிரொலிக்கின்றன.

இது ஒரு புறம் இருக்க உயிர் பிழைத்தோர் உண்ண உணவும், குடிக்க தண்ணீரும் இன்றிபரிதவிக்கின்றனர். அவற்றை பெற தக்லோன் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள முகாமில் நீண்ட வரிசையில் காத்து நிற்கின்றனர்.

பலர் உணவுப் பொருட்கள் கிடைக்காதா என அல்லாடுகின்றனர். கடைகள் மற்றும் ஹோட்டல்களைஉடைத்து அவற்றை கொள்ளையடித்து வருகின்றனர். உணவு தட்டுப்பாடு நிலை தொடர்ந்து நீடித்தால் பசியில் மேலும் பலர் மரணிக்கும் சூழ்நிலை உருவாகும் வாய்ப்புள்ளது.

இதற்கிடையே மீட்பு பணிக்கு உதவ அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் முன் வந்துள்ளன. இராணுவ விமானங்கள் மற்றும் கப்பல்கள் அனுப்ப அமெரிக்கா முன் வந்துள்ளது.

மறுபுறத்தில் பிலிப்பைன்ஸில் பெரும் அழிவை ஏற்படுத்தி, ஆயிரக்கணக்கானோரை பலி கொண்ட பெரும் புயல் வியட்நாமின் வட மாகாணமான, குவாங் நின்னில் கரை கடந்துள்ளது.

வியட்நாமை அடையுமுன் பலவீனமடைந்து கடுமையான வெப்பமண்டல புயலாக உருவெடுத்த இந்தஹையான் சூறாவளி இருப்பினும் மணிக்கு 150 கி. மீ. வேகத்தில் கரையைத்தாக்கியது.

தலைநகர ஹனாயில் பலத்த மழை பெய்யும், வெள்ளம் ஏற்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு ஏற்கனவே 6 பேர் இறந்திருப்பதாக செய்திகள் கூறுகின்றன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :