ஒருநாள் போட்டிகளில் ரிச்சர்ட்ஸ் சாதனையை சமன் செய்ததில் மகிழ்ச்சி

ருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 5000 ரன் கடந்த வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் நட்சத்திரம் விவியன் ரிச்சர்ட்சின் சாதனையை சமன் செய்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று இந்திய வீரர் விராத் கோஹ்லி கூறியுள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் கொச்சியில் நேற்று முன்தினம் நடந்த முதல் ஒருநாள் போட்டியில், கோஹ்லி 84 ரன் விளாசி ஆட்டமிழந்தார். அவர் 81 ரன் எடுத்தபோது, 5000 ரன் என்ற சாதனை மைல் கல்லை எட்டினார் (120வது போட்டி, 114 இன்னிங்ஸ்).

ஒருநாள் போட்டிகளில் அதிவிரைவாக 5000 ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் அவர் ரிச்சர்ட்சின் சாதனையை (126 போட்டி, 114 இன்னிங்ஸ்) சமன் செய்தார். இது குறித்து கோஹ்லி கூறியதாவது: சாதனையை மனதில் வைத்து விளையாடவில்லை. சிறப்பாக பேட்டிங் செய்தால் சாதனைகள் தன்னால் தேடி வரும் என்பதை உணர்ந்துள்ளேன். ரிச்சர்ட்ஸ் போன்ற மகத்தான வீரரின் சாதனையை சமன் செய்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இது வெறும் தொடக்கம்தான். இன்னும் செல்ல வேண்டிய தொலைவு அதிகம் உள்ளது.இவ்வாறு கோஹ்லி கூறியுள்ளார்.மிக இளம் வயதில் இந்த சாதனை மைல் கல்லை கடந்த வீரர் என்ற பெருமை மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் வசம் உள்ளது (23 வயது 294 நாள்). கோஹ்லி (25 வயது. 16 நாள்) 2வது இடத்தில் உள்ளார். சச்சின் 138வது இன்னிங்சில் 5000 ரன் எட்டினார். ஆனால், அவர் 80 போட்டிகளுக்கு பிறகே தொடக்க வீரராகக் களமிறங்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :