ஈடன் கார்டனில் விடைபெற்ற தெண்டுல்கருக்கு பரிசளித்த மம்தா பானர்ஜி

தெண்டுல்கரின் 199-வது டெஸ்ட் கிரிக்கெட் கொல்கத்தா ஈடன் கார்டனில் 6-ந் திகதி தொடங்கி 3-வது நாளிலேயே முடிந்தது. இதில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது.

போட்டி முடிந்த பின் தெண்டுல்கருக்கு வழியனுப்பும் விழா நடைபெற்றது. இதில் மேற்குவங்காள முதல்- மந்திரி மம்தா கலந்து கொண்டு அவருக்கு தன் கையால் வரைந்த ஓவியத்தை பரிசாக வழங்கினார்.

மேலும், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் வீரருமான கங்குலி தலைப்பாகை சூட்டி மகிழ்ந்தார். கொல்கத்தா போலீஸ் கமிஷனர் சுராஜித்,துர்கா சிலையை தெண்டுல்கருக்கு வழங்கினார். மேற்கு வங்க கிரிக்கெட் சங்க தலைவர் ஜக்மோகன் டால்மியா, தெண்டுல்கருக்கு 199 தங்க இலைகளை கொண்ட ஆலமரத்தின் நடுவில், டாஸ் போட்ட தங்க நாணத்தை வைத்து பரிசளித்தார்.

தெண்டுல்கர் 2-வது இன்னிங்சில் விளையாட வரும்போது ஹெலிகாப்டர் கொண்டு 199கிலோ ரோசாப்பூ தூவப்படும் என்று மேற்கு வங்க கிரிக்கெட் சங்கம் தெரிவித்தது. ஆனால் வெஸ்ட் இண்டீஸ் இன்னிங்ஸ் தோல்வியடைந்ததால் அந்த திட்டம் கைவிடப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :