கல்முனை மாநகர சபையின் பிரதி மேயர் யார்..? என்ற புதிய சர்ச்சை

ல்முனை மாநகர சபையின் மேயர் விவகார சர்ச்சைக்கு முடிவு எட்டப்பட்டுள்ள நிலையில் கல்முனையின் பிரதி மேயர் யார்? அவர் எந்த ஊரைச் சேர்ந்தவராக இருக்கப் போகின்றார்? என்ற புதிய சர்ச்சை தலைதூக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த இரண்டு வருடங்களும் சாய்ந்தமருதைச் சேர்ந்த சிராஸ் மீராசாகிப் கல்முனை மேயராக பதவி வகித்த போது கல்முனைக்குடியைச் சேர்ந்த சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் பிரதி மேயராக பதவி வகித்திருந்தார். அவர் தற்போது மேயராக அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து பிரதி மேயர் ஒருவரைத் தெரிவு செய்ய வேண்டிய நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

அந்த பிரதி மேயர் யார் ? பிரதி மேயர் பதவியை மேயர் பதவியை இழந்துள்ள சாய்ந்தமருதுக்கா ? இல்லை மருதமுனைக்கா ? வழங்கப்படும் என்ற கேள்விகள் தற்போது எழுப்பப்படுகின்றது.

மருதமுனையைச் சேர்ந்த இஸட். எம். மசூர் மெளலானா சிறிது காலம் கல்முனை மேயராக பதவி வகித்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :