இன்று தொடக்கம் வெளிநாட்டு தலைவர்களின் வருகை ஆரம்பம் - வீதிகளும் மூடப்படும்

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக மலாவி மற்றும் பாபடோஸ் ஆகிய நாடுகளின் அரச தலைவர்கள் இன்று இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.

இவர்களின் வருகையை முன்னிட்டு இன்று பகல் 12.45 தொடக்கம் பிற்பகல் 2 மணி வரை கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக வீதி உள்ளிட்ட கொழும்பின் மேலும் சில வீதிகள் மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கமைய பேலியகொடையிலிருந்து பேஸ்லைன் வீதியின் பொரளை பொது மயான சுற்றுவட்டம் வரையும் அங்கிருந்து பம்பலப்பிட்டி சந்தி வரை பௌத்தாலோக்க மாவத்தையும் குறித்த காலப் பகுதியில் மூடப்பட்டிருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறியுள்ளார்.

இதனைத் தவிர பம்பலப்பிட்டி சந்தியில் இருந்து பழைய பாராளுமன்ற சுற்றுவட்டம் வரை காலி வீதியும் குறித்த காலப் பகுதியில் மூடப்படவுள்ளது.

வீதிகள் மூடப்படவுள்ள காலப் பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் தலைமையகம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது

இதேவேளை, எதிர்வரும் 14 ஆம் திகதியே அதிகளவிலான அரச தலைவர்கள் இலங்கைக்கு வருகைதரவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அறிவித்துள்ளார்.

இதனால் அன்றைய தினத்தில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

14ஆம் திகதி காலை 8.15 இல் இருந்து மாலை 6.30 வரை அவ்வப்போது சில வீதிகளூடான வாகன போக்குவரத்தை மட்டுப்படுத்த நேரிடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :