-மன்சூர் -
அட்டாளைச்சேனை சரீப்ஹாஜியார் வீதியில் அமைந்துள்ள சுஹாறா கல்வி நிலையத்தினரால் வருடாந்தம் நடாத்தப்படுகின்ற முன்பள்ளி மாணவர்களின் வருடாந்த விடுகை நிகழ்வும், சுஹாறாவின் மூன்றாண்டு நிறைவு நிகழ்ச்சியும் நேற்று(2013.11.09) அட்டாளைச்சேனைக் கல்விக் கல்லூரியின் பார்த்திருப்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெவ்வை கலந்து கொண்டு மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கினார். மாணவர்களின் பெற்றோர்கள் சார்பில் பொருளாதார உத்தியோகத்தர் ஏ.சி.சமீம் நன்றியுரையாற்றுவதையும், மாணவர்கள் சார்பில் ஏ. பாத்திமா பணான் அறபாத் உரையாற்றுவதையும், மாணவர்களின் அழகிய நடங்களையும், ஏனைய கலை நிகழ்வுகளையும் படங்களில் காணலாம்.




0 comments :
Post a Comment