கார்த்தியிடம் சிக்கிய வெற்றிப் பட இயக்குனர் யார் ?

ழகுராஜாவால் இப்படி ஒரு மகத்தான தோல்வி தன்னைத் தேடி வரும் என்று கார்த்தி மட்டுமல்ல அவரது அண்ணன் சூர்யாவும் வருத்தப்பட்டுத்தான் போனார்.

கார்த்தியும் டைரக்டர் ராஜேஷை ரொம்பவே நம்பியிருந்தார். ஆனால் அவரோ ஏதோ பிக்னிக் போய் விட்டு வந்த எஃபெட்க்டில் மொத்த படத்தையும் எடுத்து வந்து போட்டுக் காட்டி ரசிகர்களை கடுப்பேற்றியது தான் மிச்சம்.

அதுபோக மிச்சமிருக்கும் பிரியாணி, காளி ஆகிய இரண்டு படங்கள் மீதும் கார்த்திக்கு அவ்வளவாக நம்பிக்கை இல்லையாம்.

இந்நிலையில் ‘மௌனகுரு’ என்ற ஹிட் படத்தை டைரக்ட் செய்த சாந்தகுமாருடன் ஒரு புதிய படத்தில் இணையப் போகிறார் கார்த்தி. இதுவும் அவரது ஆஸ்த்தான ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பு தான். படத்தின் டைட்டில், ஹீரோயின் உட்பட எந்த சமாச்சாரங்களும் இன்னும் முடிவாகவில்லை.

ஆனால் ஒரு மெகா ஹிட் படத்தைக் கொடுக்க ஒரு நல்ல டைரக்டர் நமக்கு சிக்கி விட்டார் என்ற சந்தோஷத்தில் மட்டும் இருக்கிறாராம் கார்த்தி.

இந்த சந்தோஷமாவது அவருக்கு ஹிட் படத்தை தரட்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :