யாழ். பல்கலைக்கழகம் டிசம்பர் 2 வரை பூட்டு

யாழ். பல்கலைக்கழகம் நேற்று 8ஆம் திகதி மூடப்பட்ட நிலையில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதியே மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள சகல பல்கலைக்கழகங்களும் இன்று 9ஆம் திகதியிலிருந்து எதிர்வரும் 17ஆம் திகதி வரை பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டை முன்னிட்டு மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் யாழ். பல்கலைக்கழகம் மட்டும் டிசம்பர் மாதம் 2ஆம் திகதி வரை மூடப்பட்டும் என யாழ். பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்தார் தெரிவித்தார்.

விடுதி மாணவர்கள் தொடர்பில் பதிவாளரிடம் கேட்டபோது,

விடுதியில் தங்கியிருந்து கற்ற மாணவர்கள் நேற்றைய தினமே தமது வீடுகளுக்குச் சென்றுவிட்டனர் என தெரிவித்தார்.

விடுதியிலிருந்து வெளியேற தாம் காலக்கெடு எதுவும் விதிக்கவில்லை எனவும் மாணவர்கள் தமது விருப்பத்திற்கு ஏற்ப வெளியேற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களுக்கு ஒரு வார விடுமுறை வழங்கப்பட்டுள்ள நிலையில் யாழ். பல்கலைக்கழகத்திற்கு நீண்ட விடுமுறை ஏன் என வினவியபோது,

மாணவர்களுக்கான பரீட்சை தயார்படுத்தல் விடுமுறையா இக்காலம் அமையப்பெறும் என யாழ். பல்கலைக்கழக பதிவாளர் மேலும் குறிப்பிட்டார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் இயக்கத்தின் மாவீரர் நாள் எதிர்வரும் 27ம் நாள் அனுஷ்டிக்கப்படுவதன் காரணமாக யாழ். பல்கலைக்கழகத்திற்கு நீண்ட விடுமுறை வழங்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வருடம் மாவீரர் நாளன்று யாழ். பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் தீபமேற்றி அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதன் பின்னர் இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மாணவர்கள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :