-நிஸ்மா றியாஸ்,ஐ.ஏ.சிராஜ்-
தேசத்திற்கு மகுடம் வேலைத்திட்டத்தின் மூலம் இன்று மாலை(11) கல்முனை தமிழ் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட நற்பிடடிமுனை-02 கிணற்றடி வீதி இரண்டு மில்லியன்; ரூபா செலவில் கொங்கிரீட் வீதியாக புனரமைக்கும் வேலைத்திட்டம் இளைஞர் சேவை அதிகாரி பிரபாகரன் தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் அம்பாறை மாவட்ட தமிழ் பிரதேச செயலகங்களின் அபிவிருத்திக் குழுத் தலைவருமான பி.எச்.பியசேன பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்.
இதன் போது பத்து இலட்சம் ரூபா செலவில் இவ் வீதியில் அமைக்கப்பட்ட குடி நீர் விநியோகத்திட்டத்தினையும் ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் வீ.லவநாதன் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் இராஜ குலேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
பாராளுமன்ற உறுப்பினரின் ஏற்பாட்டில் இவ்வேலைத்திட்டத்திற்கு மூன்று மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.




0 comments :
Post a Comment