ஐக்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதையில் செல்லும் நோக்கில் 100 நாள் வேலைத்திட்டம்

க்கிய தேசியக் கட்சியை வெற்றிப் பாதையில் இட்டுச் செல்லும் நோக்கில் கரு ஜயசூரிய தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள தலைமைத்துவச் சபை, கட்சியின் வெற்றிக்காக 100 நாள் வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தீர்மானித்துள்ளது.

தலைமைத்துவச் சபையின் உறுப்பினர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி கடமைகளை பெறுப்பேற்கவுள்ளனர். அன்றைய தினத்தில் இருந்து இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட உள்ளது.

அத்துடன் தலைமைத்துவச் சபையில் இருந்து விலகிய நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜித் பிரேமதாச மற்றும் தலதா அத்துகோரள ஆகியோருக்கு பதிலாக புதிய உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

அடுத்து நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் கட்சியை வெற்றிப் பெற செய்ய வேண்டியது தலைமைத்துவச் சபையின் பிரதானமான குறுகிய கால நோக்கமாகும். அத்துடன் கட்சியை வெற்றியை நோக்கி இட்டுச் செல்லும் நீண்டகால செயற்திட்டமும் அமுல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :