சற்குணத்திடம் மன்னிப்பு கேட்ட நஸ்ரியா - இதன் பின்னால் பணமா ? உண்மையா?

யக்குனர் சற்குணத்திடம் மானசீகமாக மன்னிப்பு கேட்டுள்ளாராம் நஸ்ரியா நசீம்.

நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவுக்கு டூப் வைத்து தொப்புளைக் காட்டிய விவகாரம் லேசாக அணைய ஆரம்பித்திருக்கிறது.

இயக்குனர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார் நஸ்ரியா.

அதற்குப் பிறகு மீடியா நண்பர்களுக்கு பாடலைத் திரையிட்டுக் காட்டுகிறேன், வேண்டுமானால் நஸ்ரியாவும் பாடலைப் பார்த்து பதில் சொல்லட்டும் என்றும் உறுத்தலாக இருந்தால் அந்தக் காட்சியை நீக்கவும் தயார் என கூறியுள்ளார் சற்குணம்.

இதனைத் தொடர்ந்து இன்று காலையில் நஸ்ரியா அப்பா நசீம், நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் நய்யாண்டி படத்தை போர் பிரேம்ஸ் ப்ரிவியூ திரையரங்கில் பார்த்தார்களாம்.

சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாகவும், கவர்ச்சியாகவும் இல்லை என்பது தெளிவானதால் அதற்குப் பிறகு சமரச பேச்சுவார்த்ததைகள் நடந்திருக்கின்றன.

உறுத்தலான அந்தக் காட்சியும் படத்தில் இருந்து நீக்கப்பட இருக்கிறது.

இதனால் சற்குணத்திடம் எமோஷனலாகி மானசீகமாக மன்னிப்பு கேட்டாராம் நஸ்ரியா.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :