அம்பாறை மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்துவது தொடர்பில் கல்முனை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கலையரசன் தெரிவித்தார்.
கடந்த புதன் மற்றும் வியாழக்கிழமை ஆகிய இரு தினங்களில் மட்டும் இரு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்கள் மீது பாராளுமன்ற உறுப்பினர் பியசேனவின் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக கலையரசன் தெரிவித்தார். நாவிதன்வெளி பிரதேசத்துக்குட்பட்ட 11 ஆம் கொலனி பகுதியிலேயே தமது ஆதரவாளர்கள் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

0 comments :
Post a Comment