(எம்.பைஷல் இஸ்மாயில்)
கடந்த 2012 ஆம் ஆண்டு நடைபெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான விஷேட நிர்வாக சேவை போட்டிப் பரீட்சையின் மூலம் தெரிவு செய்யப்பட்ட 43 நிருவாக சேவை உத்தியோகத்தர்களின் சேவை நிலையங்களை உறுதிப்படுத்திய நியமனக் கடிதத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்படவுள்ளன.
இந்நிகழ்வு எதிர்வரும் 2013.08.14 ஆம் திகதி புதன்கிழமை மாலை 4.30 மணிக்கு அலரி மாலிகையில் இடம்பெறவுள்ளது. இதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 29 தமிழர்களும், 14 முஸ்லிம்களும் இந்த விஷேட நியமனங்களை பெற்றுக்கொள்ளும் நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் தங்களுக்கென குறிப்பிட்டு கிடைக்கப்பெறும் பிரதேசத்தில் தங்களின் கடமைகளை பத்து வருடங்கள் கட்டாயம் பணி புரியவேண்டும்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வெற்றிடமாக நிலவி காணப்படும் பிரதேச செயலகங்களிலுள்ள உதவி பிரதேச செயலாளர், மாகாண அமைச்சிகளில் உள்ள மாகாண உதவி செயலாளர், மாகாண திணைக்கள உதவிப் பணிப்பாளர் மற்றும் உதவி ஆணையாளர் போன்ற வெற்றிடங்களுக்கே இந்த நிர்வாக சேவை உத்தியோகத்தர்கள் கடமையில் அமர்த்தப்படவுள்ளனர்.
மேற்படி தெரிவு செய்யப்பட்ட இந்த நிருவாக சேவை உத்தியோகத்தர்கள் தங்களின் பயிற்சிகளை கடந்த எட்டு மாத காலமாக மேற்கொண்டு கடந்த 2013.07.26 ஆம் திகதி நிறைவு செய்துள்ளமையும், இவர்களுக்கான நியமனம் இம்மாதம் 2013.08.01 ஆம் திகதி வியாழக்கிழமை பொது நிருவாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் வழங்கப்பட இருந்த இந்நிலைமையில் ஜனாதிபதியின் விஷேட கோரிக்கைக்கு அமைவாக கடந்த 30 வருடகால பயங்கரவாத யுத்த சூழ் நிலையிலிருந்து பொதுமக்கள் விடுபட்டதன் பின்னர் முதல் தடவையாக வழங்கி வைக்கும் மேற்படி நியமனத்தை தானே வழங்கி வைக்கவேண்டும் என்று முன்வந்தமைக்கு அமைவாகவே பிட்போடப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment