இலங்கையிடம் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்கியதாக, இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கூறுவது முற்றிலும் பொய்யான தகவல் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய நிராகரித்துள்ளார்.
இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே அந்தோனி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், கடந்த மூன்று ஆண்டுகளில் முப்படைகளுக்காக, ரஸ்யா, இஸ்ரேல்,பிரித்தானியா, அமெரிக்கா, சுலோவாக்கியா, போலந்து, பின்லாந்து,இலங்கை ஆகிய நாடுகளில் இருந்து 23.5 பில்லியன் ரூபா பெறுமதியான ஆயுதங்களை கொள்வனவு செய்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி இந்தியாவின் பிரிஐ செய்தி நிறுவனம் மற்றும், ஊடகங்கள் பலவும் இந்தச் செய்தியை வெளியிட்டிருந்தன.
எனினும் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் கூறிய தகவல் முற்றுமுழுதாக பொய்யான ஒன்று. என இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இலங்கையில் இருந்து கடந்த காலங்களில் ஒருபோதும் இந்தியாவுக்கு ஆயுதங்களை விற்கவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.