இலங்கையில் இந்த வருடம் எற்பட்ட பிறை சம்பந்தமான பிரச்சினையையும் அவை பற்றிய தீர்வுகளையும் நாம் நடு நிலைக்கண்ணோட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். பிறை விடயத்தில் சமூகம் அல்லோலகல்லோலப்பட்டது என்பது இது முதற்தடவையல்ல என்றிருந்த போதும் இம்முறை மிகக்கடினமான நிலையை சமூகம் சந்தித்தது.
-
- முதலில் பிறை தெண்பட்டது என்பதை அறிவித்தவர்களின் வாதத்தை பார்ப்போம்.
- 8ம் திகதி பிறை தென்படுகிறதா என பார்த்து அறிவிக்கும் படி உலமா சபையே பகிரங்கமாக முஸ்லிம்களை கேட்டிருந்தது. இதன் படி கிண்ணியாவில் சுமார் 6.36, 6.40 அளவில் பிறை தென்பட்டதாக பலமான சாட்சியங்களுடன் 7 மணியளவில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அகில இலங்கை உலமா சபை ஏற்றுக்கொள்ளாததால் தன்னிச்சையாக சில ஜமாஅத்துக்கள் பெருநாள் கொண்டாடுவது என முடிவுக்கு தள்ளப்பட்டனர்.
-
- அடுத்ததாக ஜம்இய்யத்துல் உலமாவின் இவற்றுக்கான மறுப்புக்களை பார்ப்போம். இக்கருத்துக்களை உலமா சபை தலைவரின் ஒரு மணி நேர விளக்கம், மற்றும் அறபுக்கல்லூரி அதிபரான மௌலவி ஹாசிம் சூரி என்பவரின் இலங்கை வானொலியூடாக சொன்ன கருத்துக்களிலிருந்து பின் வரும் விளக்கங்களை நாம் பெறுகிறோம். அதாவது,
-
- 8ம் திகதி பிறை தென்படக்கூடிய சாத்தியக்கூறு இல்லை என்பது முஸ்லிம் வானியலாளர்களின் உறுதியான கருத்து. ஆகவே பிறை தென்பட்டிருக்க முடியாது. வேறு ஏதாவது தெரிந்திருக்கும் என்பது உலமா சபையின் வாதம். அத்துடன் உலமா சபை முஸ்லிம்களின் மார்க்க ரீதியான தலைமை என்பதால் அதற்கு கட்டுப்பட்டிருக்க வேண்டும்.
-
- உலமா சபையின் இந்தக்கருத்துக்கள் சரிதானா என்பதை ஆராயப்புகும் போது பலமான சில கேள்விகள் எழுகின்றன. ஜம்இய்யத்துல் உலமா வானவியலை முழுவதாக ஏற்றுக்கொள்கிறதா? அவ்வாறு ஏற்றுக்கொண்டதாயின் ஏன் பிறை பாருங்கள் என முஸ்லிம்களிடம் பகிரங்கமாக கோர வேண்டும்.? இவ்வாறான கோரிக்கை மூலம் வானவியல் அறிஞர்களின் கருத்தையும் மீறி பிறை தென்படலாம் என்ற யூகத்திலேயே பிறை பார்க்கும் படி உலமா சபை கோரியுள்ளதா அல்லது முஸ்லிம்களை சமாளிக்கும் நோக்கமா? பிறை கண்டும் வானவியல் அறிவிப்புக்கு மாற்றமாக பிறை காணப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல் போனமை என்பது ஜம்இய்யத்துல் உலமாவின் முரண்பட்ட நிலைப்பாட்டை காட்டுகிறது.
- அவ்வாறு வானியல் அறிஞர்கள் இன்று பிறை தென்படாது என்பதை மனதில் வைத்துக்கொண்டு உலமா சபை தீர்ப்பு வழங்குமாயின் இன்னொரு கோணத்தில் மறுபக்கமாக பார்த்தால் அதாவது வானவியல் அறிஞர்கள் இன்ற பிறை தென்படலாம் என அறிவித்து அன்று பிறை தென்படாவிட்டாலும் நோன்பு அல்லது பெருநாளை என உலமா சபை அறிவிக்குமா என்ற கேள்வியும் எழுகிறது.
- வானியல் முஸ்லிம் அறிஞர்களின் கருத்தை பாhக்க வேண்டும் என்பது ஜம்இய்யாவின் பிறைக்குழுவுக்குரிய நிபந்தனையாக இருக்கலாம். இதன் காரணமாக இது விடயத்தில் ஜம்இய்யாவுக்கு சில நியாயங்களும் இருக்கலாம். ஆனால் இது குர்ஆன் ஹதீத் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட நிபந்தனையில்லை என்பதால் இதனை சமூகத்துக்கு திணிப்பது நியாயமா என்ற கேள்வியும் எழுகிறது.
-
- அடுத்தது சூரியன் மறைந்து 14 நிமிடங்களின் பின்னரே பிறை தென்படும் என்றிருக்க 6.29க்கு சூரியன் மறைந்திருக்க 6.30க்குப்பின் எவ்வாறு பிறை தென்பட்டிருக்க முடியும் என்பது தலைவர் ரிஸ்வி முப்தி தனது பகிரங்க வானொலி உரையின் போது கேட்டுள்ளார்.
மேலோட்டமாக பார்க்கும் போது அவரது கருத்து நியாயமானதாக தெரியும். சூரியன் 6.29க்கு மறைந்தது என்ற வார்த்தையை அவர் பகிரங்கமாக கூறினார்.
இவ்வுரையின் ஒலிப்பதிவு உள்ளவர்கள் மீண்டும் கேட்டுப்பார்க்கலாம். இங்குதான் மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது என எண்ணுகிறேன். அதாவது ரிஸ்வி முப்தியும் பிறைக்குழுவும் இருந்த இடம் கொழும்பு. கொழும்பில் சூரியன் 6.29க்கே மறைகிறது. ஆனால் பிறை காணப்பட்ட இடம் கிழக்கு மாகாண கிண்ணியாவில். இங்கு சூரியன் 6 24க்கு மறைகிறது. இதன் படி 14 நிமிடங்கள் போனால் சரியாக 6. 38க்கு பிறை தென்பட்டிருக்கிறது. ஆகவே பிறையை கண்டுள்ளார்கள் என்பது நூறு வீதம் உண்மையாகிறது. ஆக கிழக்கு மாகாண நேரத்தை உலமா சபை மறந்தது வே இக்குழப்பத்துக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
அத்துடன் மௌலவி ஹாசிம் கூறும் போது தாங்கள் பிறை கண்டவரிடம் பிறை எவ்வாறு இருந்தது என்று கேட்டதாகவும் அதற்கு அவர் தெளிவான பதிலை தரவில்லை என்றும் பிறையை கண்டோம் நம்பினால் நம்புங்கள் என சொன்னதாகவும் வானொலியில் குறிப்பிட்டார். இவ்வாறு சின்னத்தனமான கருத்தைக்கூறும் ஒருவர் ஓர் அறபுக்கல்லூரிக்கு அதிபராக இருக்கும் தகுதி உள்ளவரா என்பது பலமான கேள்விக்குறியாகும்.
- ஒரு முஸ்லிமிடம் பிறை எப்படி இருந்தது என்ற கேள்வி பொருத்தமானதா? பிறை என்றால் என்ன அது எப்படி இருக்கும் என்பது தெரியாத ஒரு முஸ்லிம் இருப்பானா? பிறை எப்படி இருக்கும் என்று கேட்டால் பிறை, பிறை போன்றுதான் இருக்கும் என்று தான் கூறப்படும்.

கீறிக்காட்டுங்கள் என்றால்த்தான் கீறிக்காட்ட முடியும். ஆக பிறை கண்டவர்களை குழப்புவதற்காகவே இவ்வாறான கேள்விகள் வேண்டுமென்றே கேட்கப்பட்டுள்ளன என்றே மிகத்தெளிவாக தெரிகிறது. அதாவுது நாளை பெருநாள் எடுக்கக்கூடாது என தீர்மானித்து விட்டு - தீர்ப்பை முதலில் எடுத்து விட்டு பின்னர் சாட்சிக்காரரை வேண்டுமென்றே குழப்பியுள்ளார்கள் என்பதை நடுநிலைமையாக சிந்திக்கும் போது தெரிகிறது.
- கிண்ணியாவில் ஓரிருவர் அல்ல பத்துக்கு மேற்பட்டோர் பிறை கண்டுள்ளார்கள் என்பது சாதாரண விடயம் அல்ல.
-
- பெருநாள் கொண்டாடியது சரியா?
- இதற்கிடையே கிண்ணியாவில் பிறை கண்ட செய்தியை அறிந்த ஸ்ரீலங்கா தவ்ஹீத் ஜமாஅத்தினர் பிறை கண்டவர்களின் தொலைபேசி இலக்கங்களுடன் நாளை பெருநாள் என அறிவித்தார்கள். இன்னும் பல ஜமாஅத்தினரும் கிண்ணியாவில் பிறை காணப்பட்டுள்ள இந்தச்செய்தியின் படி கிண்ணியாவுடன் தொடர்பு கொண்டு அதனை உண்மைப்படுத்திய பின் பெருநாள் எடுப்பதாக நடு இரவு 12 மணிக்குப்பின் முடிவெடுத்தார்கள்.
-
- பிறை கண்டு நோன்பு பிடியுங்கள் கண்டு விடுங்கள் என்பது நபிமொழி என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இது தனிப்பட்ட ஒவ்வொரு முஸ்லிமுக்கு அல்லது ஒரு குழுவுக்கோ நபியவர்களால் சொல்லப்பட்டதல்ல.

மாறாக முழு முஸ்லிம் சமூகத்துக்கும் சொல்லப்பட்ட ஒன்றாகும். துரதிஸ்டவசமாக இலங்கையில் அரசிலுக்கு ஒரு தலைமைத்துவம், ஆன்மீகத்துக்கொரு தலைமைத்துவம் என இருக்கின்றமையால் இது ஆன்மீக தலைமைக்கும் பொருத்தமதானதாகும்.
- இந்த இடத்தில் சமூகம் தலைமைக்கு கட்டுப்பட்டு இஸ்லாத்துக்கு மாறு செய்வதா? அதாவது உலமா சபை தலைமைக்கு கட்டுப்பட்டு நோன்பு பிடிப்பதா? அல்லது தலைமையை நிராகரித்து இஸ்லாத்தை அமுல் படுத்;துவதா என்ற மிகக்கடினமான நிலையில் சமூகத்தின் தடுமாற்றத்தை நாம் காண முடிந்தது.
-
- இது போன்ற விடயங்களில் ஆன்மீக தiமைத்துவம் தவறு செய்தால் அதற்குரிய தண்டனையை அவர் பெற்றுக்கொள்வார். அதற்காக சமூகம் பாவிகளாக மாட்டாது என்பதை இஸ்லாம் மிகத்தெளிவாக கூறுகிறது. உதாரணமாக தொழுகையில் இமாம் 4 ரக்அத்துக்கு அதிகமாக 1 ரக்அத்தை கூட்டித் தொழுதால் அதனை பின்னாரிலிருப்பவர்கள் அறிவுறுத்தியும் கேளாமல் அவர் எழுந்து தொழுதால் நாமும் அவருடன் எழுந்து தொழ வேண்டும் என்றே இஸ்லாம் வலியுறுத்துகிறது. அவர் வேண்டுமென்று செய்திருந்தால் பின்னால் தொழுபவர்கள் குற்றவாளிகள் அல்ல.
அவர்தான் குற்றவாளி. இந்த வகையில் நாளை நோன்பு என என்ற உலமா சபையின் அறிவிப்பை தமது தலைமைக்கு கட்டுப்படுதல் என்ற அடிப்படையில் நோன்பு பிடித்த மக்கள் குற்றவாளிகள் அல்லர்.
-
- அதே போல் இந்த பிறை விடயத்தில் ஜம்இய்யத்துல் உலமா பிழை செய்துள்ளது என்பது நன்றாக தெரிந்த பின்னரும் தவ்ஹீத் ஜமாஅத்தும் ஏனையவர்களும் நோன்பு நோற்பதை தவிர்த்து பெருநாளை கொண்டாடியது சரியா என்பதை பார்க்கும் போது, 'இறைவனுக்கு மாறு செய்வதில் படைக்கப்பட்ட ஒன்றுக்கு வழிபடக்கூடாது' என்ற ஹதீதின் அடிப்படையில் நோன்பை விட்ட மக்களும் குற்றவாளிகள் அல்ல. அவர்கள் நோன்பை களாச் செய்ய வேண்டும் என்பதுமில்லை. ஆனாலும் இவ்வாறான சமூகம் குழப்பமான, முரண்பட்ட நிலையில் என்ன செய்திருக்க வேண்டும்?
-
- என்ன செய்திருக்க வேண்டும்.?
- இந்த சிக்கலான நிலையில் அதாவது தலைமைத்துவமா? உண்மையை ஏற்பதா என்ற நிலையில் மக்கள் என்ன செய்திருக்க வேண்டும்.?
-
- இவ்வாறான நிiயில் நாளை நோன்பை விட்டு விட்டு அதற்கு அடுத்த நாள் பெருநாளை கொண்டாடும் படி அறிவித்திருந்தால் முஸ்லிம் சமூகம் பாராட்டுப்பெற்றிருக்கும். இவ்வாறு செய்வதற்கு நபியவர்களின் வாழ்விலும் இடமுண்டு என்பதுதான் மிகச்சிறந்த விடயமாகும்.

- ஒரு முறை அசர் நேரத்தில் மதீனாவை அடைந்த பிரயாண குழுவொன்று தாங்கள் இடையிலே பிறை பார்த்ததாகவும் அதனால் நோன்பு நோற்கவில்லை எனவும் கூறினார்கள். இதனை கேட்ட நபியவர்கள் மற்றவர்களை நோக்கி நோன்பை விடும் படியும் அடுத்த நாள் திடலுக்கு பெருநாள் தொழுகைக்காக வரும் படியும் கூறினார்கள். இதன் மூலம் மிகச்சிறந்த வழி காட்டலை நாம் பெறுகிறோம்.
-
- அது மாலை நேரம் என்பதால் நபிகளார் அன்றே பெருநாளை கொண்டாடாமல் மறுநாள் கொண்டாடும் படி கூறினார்கள் என சிலர் வாதிடுகிறார்கள். அது உண்மையாக இருப்பினும் ஏதோ தடங்கல் மூலம் பெருநாளை மறுநாளைக்கு ஒத்திப்போடலாம் என்பதை மிகத்தெளிவாக விளங்குகிறோம்.
நமது நாட்டில் உலமா சபை எனும் தலைமையின் அறிவித்தல் ஒரு மிகப்பெரிய தடங்கலாக ஆகிவிட்ட சூழ் நிலையில் அன்று நோன்பு பிடிக்காமல் மறு நாள் பெருநாளை எடுத்திருந்தால் அது இறைவனுக்கு திருப்தியாக இருந்திருக்கும் என்பதை உறுதியாக கூற முடியும். இதன் மூலம் மிகப்பெரிய சமூக பித்னாவை தவிர்த்திருக்கலாம்.
- மேற்படி பிரயாணக்குழு வழியில் பிறையை கண்டதும் அவர்கள் நோன்பு பிடிக்கவில்லையே தவிர பெருநாள் தொழுகை தொழவுமில்லை என்பதையும் நாம் வழிகாட்டலாக கொள்ள வேண்டும்.
-
- பெருநாள் என்றால் காலையில் திடலுக்கு சென்று தொழுவது மட்டும்தான் என்றில்லை. சிறுவர்களின் அலாதியான சந்தோசம் உறவுகளிடம் சென்று உணவுகளை பரிமாறல் என பல விடயங்கள் உள்ளன. பெரியவர்களாயின் தொழுது விட்டு வந்து ஒரு குட்டித்தூக்கம் போட்டால் அன்றைய பெருநாள் அவர்களுக்கு முடிந்து விடும்.

ஆனால் சிறுவர்கள் பாவம் அவர்களின் சில உறவினர்கள் நோன்பும் சிலர் பெருநாளாகவும் ஒரு மிகப்பெரிய அநியாயமே நடந்துள்ளது. பெருநாளுக்கான சிறுவர்களின் உரிமைகளை நாம் இல்லாது செய்துள்ளோம். சில சிறுவர்கள் பெருநாள் என நினைத்து உறவுகளிடம் சென்ற போது நாங்கள் இன்று நோன்பு போங்கடா என விரட்டப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றுள்ளன.
-
- இதனை முன் கூட்டியே உணர்ந்து அகில இலங்கை உலமா கவுன்சில் ஒரு செய்தியை வெளிட்டது. அதாவது பிறை விடயத்தில் உலமா சபை தவறாக முடிவெடுத்துள்ளது.
-
- இதனை முன் கூட்டியே உணர்ந்து அகில இலங்கை உலமா கவுன்சில் ஒரு செய்தியை வெளிட்டது. அதாவது பிறை விடயத்தில் உலமா சபை தவறாக முடிவெடுத்துள்ளது.
பிறை கண்ட விடயம் உண்மையானதாகும். ஆனாலும் முஸ்லிம்கள் மத்தியில் பித்னா ஏற்படுவதை தவிர்க்குமுகமாக அனைவரும் இன்று நாளை நோன்பு பிடிக்காமல் நாளை மறுநாள் பெருநாளை கொண்டாடுங்கள் என அறிவித்தது.
ஆக அன்று பெருநாள் கொண்டாடியமை தவறாக இல்லாத போதும் அதனை மறுநாள் செய்திருந்தால் அது சமூகத்துக்கு நன்றாக இருந்திருக்கும் என்பதே நமது கருத்தாகும்.
-
- ஆக ஒட்டு மொத்தமாக பார்க்கும் போது இந்த பிறை விடயத்தில உலமா சபையும், ஏனைய ஜமாஅத்துக்களும் சுன்னாவுக்கு முரணாகவே நடந்து கொண்டுள்ளன. எவருமே முஸ்லிம் சமூகம் பற்றி சிந்திக்காது தமது சொந்த நலன்களையே அதாவது விட்டேனா பார் என்ற நிலயிலேயே நடந்து கொண்டுள்ளனர் என்பதை நடு நிலைமையாக சிந்திக்கும் எவரும் எற்றக்கொள்வர்.
-
- உலமா சபை என்ன செய்திருக்க வேண்டும்?
-
- முதலில் உலமா சபையின் பிறைக்குழுவினர் இரவு ஒன்பது மணியுடன் தமது காரியாலயத்தை மூடிக்கொண்டமைக்காக பகிரங்கமாக வருத்தம் தெரிவித்திருக்க வேண்டும்.

அத்துடன் பிறைக்குழு சுமார் பத்துப்பேருடன் மூடிய அறைக்குள் கூடியதாகவும் ஊடகவியலாளர்கள் எவரும் அனுமதிக்கப்படவில்லை என்றும் ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இது உண்மை என்றால் அதற்காக பிறைக்குழு சமூகத்திடம் மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும்.
அத்துடன் மறநாள் தலைவர் தமது பேச்சில் - ஏதோ தவறு எங்கோ நடந்துள்ளது என்பதால் கிண்ணியா உலமா சபையின் முடிவை ஏற்று பெருநாள் கொண்டாடியவர்களுக்கு அள்ளாஹ் அருள்புரிவானாக என்றும், உலமா சபையின் கூற்றை ஏற்று நோன்பு பிடித்தவர்களுக்கும் அள்ளாஹ் அருள் புரிவானாக என்றும் கூறியிருந்தால் சமூகத்தின் ஒற்றுமைக்கு வழி வகுப்பதுடன் உலமா சபை மீதான கடுமையான கண்டனங்களிலிருந்தும் தப்பியிருக்கலாம். இதனை விடுத்து பெருநாள் கொண்டாடியவர்கள் பாவிகள் என்பது போல் அவர் பேசியதை அனுமதிக்க முடியவில்லை.
-
- தீர்வு என்ன?
-
- இவ்வாறான பிரச்சினைகளுக்கு பல தீர்வகள் உள்ளன.
- 1. அனைவருக்கம் பொதுவான மக்கா பிறையை வைத்து நோன்பு மற்றும் ஹஜ்ஜை தீர்மானித்தல். இது சம்பந்தமாக நாம் தனியான கட்டுரையை எழுதுவோம்.
-
- தீர்வு என்ன?
-
- இவ்வாறான பிரச்சினைகளுக்கு பல தீர்வகள் உள்ளன.
- 1. அனைவருக்கம் பொதுவான மக்கா பிறையை வைத்து நோன்பு மற்றும் ஹஜ்ஜை தீர்மானித்தல். இது சம்பந்தமாக நாம் தனியான கட்டுரையை எழுதுவோம்.
- 2. இலங்கையை பொறுத்தவரை கிண்ணியா போன்ற கிழக்கு பிரதேசங்களிலேயே பிறை தென்படுவது அதிகம் என்பதாலும் இது விடயத்தில் கிழக்கு முஸ்லிம்களிடமே அதிகமான ஆர்வமும் உள்ளது என்பதாலும் எதிர் காலத்தில் கிழக்கு மாகாணத்துக்கென தனியான பிறைக்கமிட்டி ஒன்றை கல்முனையை மையமாக வைத்து உருவாக்கப்பட வேண்டும்.
அவர்கள் கிழக்கில் காணப்படும் பிறையை ஊர்ஜிதப்படுத்தி ஒரே நேரத்தில் ஜம்இய்யத்துல் உலமாவுக்கும் ஊடகங்களுக்கும் அறிவிக்கக்கூடிய வகையில் அவர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும். அதாவது பிறைக்குழுவின் அதிகார பரவலாக்கம் கிழக்குக்கும் தரப்பட வேண்டும்.
அக்குழுவில் கிண்ணியா, மூதூர், ஓட்டமாவடி, ஏறாவுர், காத்தான்குடி, கல்முனை, சம்மாந்துறை, நிந்தவூர், அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று, பொத்துவில் ஆகிய பெரிய ஊர்களிலிருந்து ஐந்து உலமாக்கள்; வீதம் நியமிக்கப்பட வேண்டும். அவர்களுக்கான போக்கு வரத்து வசதிகள் ஜம்இய்யத்துல் உலமாவால் செய்து தரப்பட வேண்டும்.
- 3. இதுவும் முடியாது போனால் கிழக்கு மாகாணத்துக்கென தனியான உலமா சபை உருவாக்கப்பட்டு அது முழு இலங்கை முஸ்லிம்களையும் வழி நடத்துவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
-
- இவை தவிர்ந்த வேறு தீர்வுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே சமூகத்தின் ஒற்றுமை கருதி பிறை விடயத்தில் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் அவசியம் என்பதை நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.
-
- இவை தவிர்ந்த வேறு தீர்வுகள் இருப்பதாக தெரியவில்லை. ஆகவே சமூகத்தின் ஒற்றுமை கருதி பிறை விடயத்தில் தொடர்ந்தும் ஆக்கபூர்வமான கருத்தாடல்கள் அவசியம் என்பதை நாம் இங்கு வலியுறுத்துகிறோம்.

0 comments :
Post a Comment