(எஸ்.அஷ்ரப்கான்,எம்.எம்.ஜெஸ்மின்)
கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்இய்யதுல் உலமா சபை
உறுதிப்படுத்தியதைத் தொடர்ந்து, இன்று வியாழக்கிழமை (08) கல்முனை தௌஹீத்
அமைப்பினரால் ஹூதா திடலில் புனித நோன்புப்பெருநாள் தொழுகை
இடம்பெற்றதுடன், பெருநாளும் கொண்டாடப்படுகிறது.
கிண்ணியாவில் தலைப்பிறை தென்பட்டதை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா
உறுதிப்படுத்தியுள்ளது. இந்த விடயத்தை கிண்ணியா ஜம்மியத்துல் உலமா சபை
தலைவர் ஹிதாயத்துல்லாஹ் மௌலவியும் உறுதிப்படுத்தினார்.
கிண்ணியாவில் பிறையை பார்த்ததாக கூரியவர்களுடன் கிண்ணியா ஜம்மியத்துல்
உலமா, மற்றும் தஃவா அமைப்புக்கள் விசேடமாக நடாத்திய ஒன்றுகூடலின் பின்னரே
இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விஷேட அறிக்கையை அகில
இலங்கை ஜம்மியத்துல் உலாமாவிற்கும் இச்சபை அனுப்பியுள்ளது.
எனவே இன்று (8) வியாழக்கிழமை கிண்ணியா முழுவதும் நோன்புப் பெருநாள்
கொண்டாடுமாறு கிண்ணியா ஜம்மியத்துல் உலமா தனது அறிக்கையில்
தெரிவித்துள்ளது.
இதனை உறுதிப்படுத்திய பின்னரே இலங்கையின் நாலா புறங்களிலுமுள்ள தௌஹீத்
அமைப்பினர் மற்றும் பெரும்பாலான முஸ்லிம்கள் இன்று (08) வியாழக்கிழமை
நோன்புப்பெருநாள் தொழுகையில் கலந்துகொண்டதுடன், பெருநாளையும்
கொண்டாடுகின்றனர்.
இந்த சந்தர்ப்பத்தை வைத்து நோக்கும்போது, இஸ்லாமிய அடிப்படையில்
சந்தேகத்திற்குரிய நாளில் நோன்பு நோற்பதை இஸ்லாம் தடுத்துள்ளது என்பது
குறிப்பிடத்தக்கதாகும்.
0 comments :
Post a Comment