மாட்டின் மீது மோதிய விமானம் சிறுபகுதி சேதம் 110 பயணிகள் உயிர்த்ப்பினர்

ந்தோனேசியா தலைநகர் ஜாகர்தாவில் இருந்து புறப்பட்ட லயன் ஏர் நிறுவனத்தின் ஜெட் ரக

விமானம் நேற்று சுலவேசி தீவில் உள்ள கோரோன்டலா விமான நிலையத்தில் தரை இறங்கியது.

விமானத்தின் சக்கரம் ஓடுபாதையில் பதியும் வேளையில் அருகாமையில் உள்ள புல்வெளியில்

மேய்ந்துக்கொண்டிருந்த மாடுகளில் ஒன்று ஓடுபாதையின் குறுக்கே ஓடிவந்தது.

நடக்கும் விபரீதத்தை விமானி உணர்ந்துக்கொள்ளும் முன்னர், விமானத்தின் நடுப்பகுதி சக்கரம்

மாட்டின் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் உடல் சிதறிய மாடு பல அடி தூரம்

தள்ளிப்போய் விழுந்தது.

மாட்டின் மீது மோதிய வேகத்தில் நிலைதடுமாறிய விமானம், ஓடுபாதையை விட்டு விலகி

புல்தரையில் பாய்ந்தது.

இச்சம்பவத்தில் விமானத்தின் சிறிய பகுதிய சேதமடைந்தது. ஆனால், அதிர்ஷ்டவசமாக

பயணிகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. 110 பயணிகளும் பத்திரமாக விமானத்தை

விட்டு வெளியேற்றப்பட்டனர்.

ஓடுபாதையின் குறுக்கே விபத்துக்குள்ளான விமானம் விழுந்து கிடந்ததால் அங்கிருந்து

புறப்படும் இதர விமான சேவைகள் பாதிக்கப்பட்டன.

இந்த விமானத்தை ஓட்டி வந்த விமானி இதுதொடர்பாக கூறுகையில், 'மேலே இருந்து பார்க்கும்

போது ஓடுதளத்தில் நாய்தான் மேய்கிறது என்று நினைத்தேன். விமானம் நெருங்கிய வேளையில்தான்

அது மாடு என்று தெரிந்தது' என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :