மலையகத்தில் தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் மக்கள் பல்வேறு பாதிப்புகளை சந்தித்து வருகின்ற அதேவேளை உ/த பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களும் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக பெய்த மழைக்காரணமாக பிரதேசத்தில் உள்ள பாதைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதால் வாகனங்களில் பயணம் செய்யவேண்டிய மாணவர்கள் உரிய நேரத்தில் பரீட்சைக்கு சமூகமளிப்பதில் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
அதேப்போல் பெய்துவரும் தொடர்ச்சியான மழைக்காரணமாக பிரதேசத்தில் உள்ள மின்கம்பங்கள் சாய்ந்து விழுவதாலும் மின்சார கம்பிகள் அறுந்து விழுவதாலும் அடிக்கடி மின்தடையினை இப்பிரதேச மக்கள் அனுபவிக்க நேரிட்டுள்ளது.
இதனால் இப்பிரதேசத்திலிருந்து க.பொ.த உயர்தர மற்றும் ஐந்தாந்தர புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மற்றும் தயாராகும் மாணவர்கள் இரவு நேரங்களில் படிப்பதில் சிரமங்களை எதிர்நோக்குவதோடு தமது பரீட்சை பெறுபேறுகளை இது பாதிக்கும் எனவும் தெரிவிக்கின்றனர்.
மின்தடை குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் என மாணவர்களும் பெற்றோரும் கோரிக்கை விடுக்கின்றனர்.

0 comments :
Post a Comment