வெலிவேரிய சம்பவத்தில் பாதுகாப்பு அமைச்சு தலையிட்டிருக்கத் தேவையில்லை - லக்ஷ்மன் கிரியெல்ல

வெலிவேரியாவில் அண்மையில் இடம்பெற்ற சம்பவம் நிச்சயமாக மனிதப்படுகொலை எனவும் நிராயுதபாணிகளாக நின்ற நிரபராதி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (07) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இராணவ வீரர்கள் மீது பொது மக்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்ததாக கூறி, பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி புதிய குற்றச்சாட்டை உருவாக்கி வருவதாக அவர் கூறியுள்ளார்.

வெலிவேரிய சம்பவத்தில் பாதுகாப்பு அமைச்சு தலையிட்டிருக்கத் தேவையில்லை எனவும் நீர் வழங்கல் அமைச்சும் சுற்றாடல் அமைச்சுமே இதில் தலையிட்டிருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

வெலிவேரிய சம்பவம் குறித்து பொலிஸாருக்கும் இராணுவத்திற்கும் இடையில் மோதல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸாரின் பொறுப்புக்களை இராணுவத்தினர் ஏற்றுக் கொண்டதாகவும் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

மேலும், நிராயுதபாணிகளாக நின்ற மக்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தும்படி கட்டளையிட்டது யார் என வெளிப்படுத்துமாறு அதிகாரிகளிடம் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தண்ணீர் கலன் கேட்ட மக்களுக்கு யுத்தக் கலன் கொடுக்கப்பட்டதாகவும் இந்த சம்பவத்தின் மூலம் வடக்கில் என்ன நடந்திருக்கும் என சர்வதேச சமூகம் இன்று புரிந்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தை வென்றதால் இலங்கை இராணுவத்திற்கு நிராயுதபாணிகளாக இருக்கும் மக்களை கொலை செய்ய இடமளிக்க முடியாது எனவும் வெலிவேரிய சம்பவம் மூலம் இராணுவத்தின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் லக்ஷமன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இதேவேளை, இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய மேல் மாகாண சபை எதிர்கட்சித் தலைவர் மஞ்சு ஸ்ரீ அரங்கல, அரசாங்கத்திடம் மக்கள் பலத்தைவிட பண பலம் அதிகரித்துள்ளதாகவும் பௌத்த லேபலை ஒட்டிக் கொண்டே அரசாங்கம் முன்னோக்கி செல்வதாகவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :