வவுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் பிரதான காரியாலயம் திறப்பு



வுனியா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் பிரதான காரியாலயம் 11.08.2013 ஞாயிற்றுக்கிழமை திறந்து வைக்கப்பட்டது.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனயின் காரியாலயம் கௌரவ அமைச்சர்களான சுசில் பிரேமஜெயந்த மற்றும் திஸ்ஸகரலியத்த ஆகியோர்களால் வவுனியா குருமன்காடு காளிகோயில் வீதியில் 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இதில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியின் சார்பில் வடமாகாணசபைக்கு வவுனியா மாவட்டம் சார்பில் போட்டியிடும் அபேட்சகர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் கலந்து கொண்டனர்.

இந் நிகழ்வில் சகல அபேட்சகர்களும் உரையாற்றினார்கள் அத்தோடு கௌரவ அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த உரையாற்றுகையில் வவுனியாவில் 30,000 வாக்குகளுக்கு மேலால் பெறவேண்டும் குறைந்தது நான்கு ஆசனங்களையாவது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனி கைப்பற்ற வேண்டும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முண்ணனியில் பல கட்சிகள் இணைந்து போட்டியிடுகின்றன றிஸாட் பதியுதின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் டக்ளஸ் தேவானந்தாவின் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி மற்றும் ஸ்ரீ ரெலோ ஆகியனவாகும். இதில் போட்டியிடுகின்ற அபேட்சகர்கள் தங்களுக்குள் முரண்பட்டுக்கொள்ளாமல் ஒற்றுமையாக செயற்பட்டு இந்த தேர்தலில் வெற்றி பெறுவோம்.

அடுத்ததாக கௌரவ அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த தனிப்பட்ட முறையில் அபேட்சகர்களுடன் கலந்துரையாடினார்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :