கூட்டமைப்பிடம் பிரிட்டன் தமிழர் பேரவை கோரிக்கை


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் பிரிட்டன் தமிழர் பேரவை கோரிக்கைகளை முன்வைத்துள்ளது.

சுயாட்சி அதிகாரங்ளை பெற்றுக் கொள்ளல்,போர்க் குற்றச் செயல் தொடர்பில் சர்வதேச விசாரணை, வடக்கு கிழக்கு சிங்களக் குடியேற்றங்களை அகற்றுதல் மற்றும் வடக்கு கிழக்கிற்கு இடைக்கால நிர்வாகமொன்றை நிறுவுதல் ஆகிய கோரிக்கைகள் இவ்வாறு முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த நான்கு கோரிக்கைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் வாக்குறுதிகளில் உள்ளடக்க வேண்டுமென பிரிட்டன் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது.

குறித்த கோரிக்கைகளை தேர்தல் வாக்குறுதியில் உள்ளடக்காவிட்டால், தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு ஆதரவளிக்கப் போவதில்லை என பிரிட்டன் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


வடக்கு கிழக்கிலிருந்து சிங்களவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாக அமைந்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :