இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் இந்திய விளம்பரத் தூதராக தோனி

லகின் மிகப்பெரிய மற்றும் பாரம்பரிய புகழ் மிக்க இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் இந்திய விளம்பரத் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனி நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலிஷ் பிரியர் லீக் கால்பந்தின் மிக முக்கியமான மற்றும் பிரபல அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் மிகப்பெரிய விசிறி தோனியாவார்.

அடுத்தவாரம் முதல் ´ஜாயின் த கேம்´ என்று தோனி பிரிமியர் லீக் கால்பந்து இந்திய விளம்பரங்களில் தோன்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதன் முதலாக இங்கிலிஷ் பிரிமியர் லீக் கால்பந்து போட்டிகளுக்கான ஹிந்தி வர்ணனையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுமார் 100 போட்டிகளுக்கும் மேல் ஹிந்தி வர்ணனையை வடநாட்டார்கள் தொலைக்காட்சியில் போட்டியின் போது கேட்டு மகிழலாம்.

இது குறித்து தோனி கூறியதாவது,

நான் பிரிமியர் லீகின் தீவிர இரசிகன். நான் கிரிக்கெட் விளையாடாத நாட்களில் வார இறுதிகளில் பிரிமியர் லீக் போட்டிகளையே கண்டு மகிழ்வேன்.

 கால்பந்து மிகவும் விறுவிறுப்பானது, என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானது கால்பந்தாட்டம். நான் பள்ளி நாட்களில் கோல்கீப்பராக விளையாடியுள்ளேன். இப்போதும் கூட முக்கியமான கிரிக்கெட் போட்டிகளுக்கு முன்பு நான் பயிற்சிக்காக கால்பந்தாட்டத்தையே விளையாடுகிறேன்.

இந்திய இரசிகர்கள் மற்ற விளையாட்டுகள் மீதும் விருப்பத்தை செலுத்தவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கிரிக்கெட் மீது அவர்கள் ஆர்வம் குறையக்கூடாது என்று நான் கோரும் அதே வேளையில் பிற விளையாட்டுகளையும் இரசிகர்கள் மதிக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.
இவ்வாறு கூறியுள்ளார் தோனி.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :