பட்டதாரி பயிலுனர்களின் நிரந்தர நியமன கவனயீர்ப்பு போராட்டம்


ம்பாரை மாவட்ட கரையோர பட்டதாரிகள் ஒன்றியம் எதிர்வரும் 21.08.2013 புதன்கிழமை அன்று அமைதியான கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றுக்கான அழைப்பினை விடுக்கின்றது.

அதி மேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் மஹிந்த சிந்தனையின் கீழ் பட்டதாரிகளுக்கான நியமனம் என்ற அடிப்படையில் கடந்த 07.06.2012 அன்றிலிருந்து 06 மாத பயிற்சிக்காக பட்டதாரிப்பயிலுனர்களாக பிரதேச செயலகங்களில் இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளுக்கு 14 மாதங்கள் தாண்டியும் நிரந்தர நியமனம் வழங்கப்படாது இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இருப்பினும் அதே தினத்தில் திருக்கோவில், இறக்காமம், கல்முனை முஸ்லிம் பிரிவு, தமன, உஹண, அம்பாரை பிரதேச செயலகம் மற்றும் மாவட்ட செயலகங்களில் இணைக்கப்பட்ட சில பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்பட்டு 02 மாத முழுமையான சம்பளமும் வழங்கப்பட்டுள்ளது. 

எனினும் ஏனைய பட்டதாரிகளில் பெரும்பாலானோர் தற்போதுவரை ரூபா.10,000 கொடுப்பனவு மட்டுமே பெற்றுவருகின்றனர் இது மிகவும் மன உளைச்சலை ஏற்படுத்தும் செயற்பாடாகும். 

அத்தோடு இக்கால கட்ட வாழ்க்கைச் செலவு சுமையினை சமாளிப்பது ஒரு போராட்டமாக இருந்த போதிலும் 14 மாதங்களை தாங்கிய சுமை தாங்கிகளாக இருந்து வருகின்றோம்.

எனவே இவ்வாறான இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்துள்ள பட்டதாரிகள் தங்களது நிரந்தர நியமனம் வழங்கப்படுவதை துரிதப்படுத்துமாறு கோரி உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவரும் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றினை எதிர்வரும் 21.08.2013 புதன்கிழமை காலை 09.30 மணிக்கு தத்தமது பிரதேச செயலகங்களுக்கு முன்னால் நடாத்துவதற்கு ஒழுங்குகளை மேற்கொண்டு செயற்படுத்த ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இப்படிக்கு,
அம்பாரை மாவட்ட கரையோர பட்டதாரிகள் ஒன்றியம்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :