முசலிக்கிராம மக்களுக்கு காணி உரிமைப்பத்திரம் விரைவில் வழங்கப்படும்

-முசலியூர் கே.சி.எம்.அஸ்ஹர்-
ம்மால் யாழ் முஸ்லிம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட முசலிக் கிராம மக்களின் காணிப்பிரச்சனைகளை 'மகிந்த சிந்தனையின் அடிப்படையில் அமைச்சர் றிசாத் பதியுதீன் ,பாராளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாறூக் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் அலிகான் சரீப் போன்றோரின் தீவிர முயற்சியின் காரணமாக, முசலிக் கிராமத்தைச் சேர்ந்த 80 குடும்பங்களுக்கு 80 பேர்ச்சர்ஸ்கள் வீதம் காணிகளை வழங்குவதற்கான நடவடிக்கைகளை முசலிப் பிரதேச செயலகம் செய்து வருகின்றது.

உரிய ஆவணங்களில் பயனாளிகளின் கையொப்பங்களைப் பெறும் நிகழ்வு,முசலி தேசிய பாடசாலையில் முசலிப் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர் திரு-ஏ.மனுவேற்பிள்ளை அவர்களின் தலைமையில் நடைபெற்றது இதில் முசலிப் பிரதேச கிராம உத்தியோகத்தர்,திருமதி ஆன்றுக்சினி தோமஸ் அவர்களும் முசலிப் பிரதேச செயலக நில அளவை உதவியாளர் ஏ.எம்.நஜாத் அவர்களும் கலந்து கொண்டனர். 

பெருந்தொகையான முசலிப் பிரதேச மக்கள் இன் நிகழ்வில் கலந்து கொண்டதைக் காணக் கூடியதாக இருந்தது.விரைவில் இவர்களுக்கு காணி அனுமதிப்பத்திரம் வழங்கப்பட உள்ளது.இச் செயற்பாடு தொடர்பாக இப்பிரதேச மக்கள் என்றும் அரசிற்கு நன்றியுடையவர்களாக நடந்து கொள்ள வேண்டும். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :