இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமாகும் - ஐ.நா. சபை

லங்கையில் இன்னமும் ஊடக  சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவில்லை  என்று குறிப்பிட்டுள்ள ஐ.நா சபை, ஊடக அடக்குமுறை தொடர்வதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

 இலங்கையில் ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவது அவசியமானது என்றும் ஐ.நா. சபை வலியுறுத்தியுள்ளது.

ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீமூனின் பேச்சாளர் மார்ட்டீன் நென்கீயிடம், "இன்னர் சிற்றி பிரஸ்´´ எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்ட குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

ஊடக சுதந்திரம் தொடர்பில் பெரியளவில் சர்ச்சைகள் நிலவி வருகின்றன. ஊடக சுதந்திரம் மிகவும் அவசியமானது. அடக்குமுறைகள் எதுவுமின்றி சுதந்திரமான முறையில் தங்களின் கடமைகளை மேற்கொள்ள ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐ.நா செயலரின் பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :