
பத்தாயிரம் கோழைகளை விடவும் நூறு தைரியசாலிகளினால் நாட்டை மாற்றியமைக்க முடியும் என முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று அரசியலில் ஈடுபடும் பலர் பாலியல் வல்லுறவு கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்களாகும். பழைய அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டால் மக்களுக்கு சேவையாற்ற முடியாது.
மக்களுக்கு சேவையாற்றுவதனை விடவும் இவர்கள் தங்களது நலன்களை உறுதிப்படுத்திக் கொள்வதில் ஆர்வம் காட்டினர்.
இன்று பல வீடுகளில் மூன்று வேளை சாப்பிடுவதில்லை, மிகவும் சிரமப்பட்டு இரண்டு வேளை உணவு உட்கொள்கின்றனர். கோழைகளே சட்டத்தை கையில் எடுத்து மக்களை அச்சுறுத்துவார்கள்.
நாம் சட்டத்தை மதிக்கின்றோம் எந்த சந்தர்ப்பத்திலும் குற்றச் செயல்களுக்கு இடமளிக்க மாட்டோம் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment