வெள்ளவத்தையில் ஆயுர்வேத சிகிச்சைநிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதிக்கு முற்றுகை!

கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்று சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

இதன்போது குறித்த விபச்சார விடுதியை நடத்திச் சென்ற சந்தேகநபர் ஒருவர் மற்றும் அங்கிருந்த பெண்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட பெண்கள் 25,33,38 வயதானவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (05) புதுக்கடை மூன்றாம் இலக்க நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :