பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டமையால் பரபரப்பு.

இந்தியாவின் டெல்லியில் பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் மானபங்கப்படுத்தப்பட்டமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் 20 வயது இளம்பெண் ஒருவர் பெண்களுக்கான பல்கலைக்கழக விடுதியில் தங்கி பயின்றுவந்தார்.

இவரரை கடந்த ஞாயிற்றுகிழமை அன்று சந்திக்க வந்த பல்கலைக்கழகத்தின் முன்னாள் மாணவர், திடீரென அப்பெண்ணை அடித்து, தகாத முறையில் நடந்துக்கொண்டார். 

மாணவியின் கதறல் சத்தம் கேட்டு அங்கு குவிந்த பிற மாணவர்கள், முன்னாள் மாணவரை அடித்து பொலிசில் ஒப்படைத்தனர்.

பல்கலைக்கழக வளாகத்தில் ஒரு மாணவிக்கு ஏற்பட்ட அவலத்திற்கு கண்டனம் தெரிவித்த ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எஸ்.கே. சொபோரி, இத்தகைய குற்றங்கள் மற்றும் இக்குற்றங்களில் ஈடுபடுபவர்களை மன்னிக்க முடியாது என்றார்.

மேலும் இக்குற்றங்களுக்கு கடும் தண்டனை அளிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :