தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்று ஆறுதல் தேடிக் கொண்டது.
தென்ஆப்பிரிக்கா - இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20ஓவர் சர்வதேச கிரிக்கெட் போட்டி ஹம்பன்டோட்டா மைதானத்தில் நேற்றிரவு நடந்தது. இலங்கை அணியில் காயம் காரணமாக மலிங்கா இடம் பெறவில்லை. சங்கக்கராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது.
டாஸ் ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பேட் செய்தது. 20 ஓவர்களில் தென்ஆப்பிரிக்கா3 விக்கெட்டுக்கு 163 ஓட்டங்கள் சேர்த்தது.
அடுத்து 164 ஓட்டங்கள் இலக்கை நோக்கி களம் இறங்கிய இலங்கை அணிக்கு தில்ஷனும்,மஹேலா ஜெயவர்த்தனேவும் முதல் விக்கெட்டுக்கு 67 ஓட்டங்கள் (5.5 ஓவர்) எடுத்து வலுவான தொடக்கம் ஏற்படுத்தி தந்தனர்.
இலங்கை அணி 18.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 164 ஓட்டங்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை சுவைத்தது. தில்ஷன் 74 ஓட்டங்களுடனும் (51 பந்து, 9பவுண்டரி, 2சிக்சர்), திசரா பெரேரா 25 ஓட்டங்களுடனும் (11 பந்து) களத்தில் இருந்தனர்.
இலங்கை அணிக்கு இது ஆறுதல் வெற்றியாகவே அமைந்தது. ஏனெனில் 3போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை தென்ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது. முன்னதாக ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் இலங்கை வென்றது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment