காஷ்மீரில் வசிக்கும் ஒரு சிறுமியின் உறவினர் ஒருவர் பயங்கரவாத செயலில் ஈடுப்பட்டிருந்ததால், அச்சிறுமிக்கு பாஸ்போர்ட் அளிக்க மறுப்பு தெரிவிக்கபட்டிருந்தது.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை அடுத்து அச்சிறுமிக்கு பாஸ்போர்ட் அளிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் தொண்டு நிறுவனத்தின் உதவியோடு பயின்று வரும் சுஃபைரா ஜான் என்னும் சிறுமி தன்னுடைய திறமையால் இந்தியா-அமெரிக்கா இளைஞர் கல்வி பரிமாற்ற திட்டத்தின் கீழ் அமெரிக்காவிற்கு செல்லும் வாய்ப்பை பெற்றார்.
ஆனால், இந்த 15 வயது சிறுமியின் உறவினர் ஒருவர் 1995 ஆம் ஆண்டு வரை பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதால், 1997 ஆம் ஆண்டு பிறந்து சாதிக்க துடிக்கும் இச்சிறுமிக்கு பாஸ்போர்ட் அளிக்க மறுக்கப்பட்டது. சுஃபைரா ஜானின் உறவினர் முன்னர் பயங்கரவாதியாக இருந்துள்ளார். பின்னர், 1995 ஆம் ஆண்டு போலீசாரிடம் சரணடைந்த அவர், பொது மன்னிப்பு பெற்று தற்போது இயல்பு வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
இதனை மேற்கோள் காட்டிய காஷ்மீர் மாநில சி.ஐ.டி. துறையினர் பயங்கரவாதியின் உறவினர் என்பதால் சுஃபைரா ஜானுக்கு பாஸ்போர்ட் வழங்க கூடாது என்று மாநில அரசுக்கு தெரிவித்ததாக தெரிகிறது.
இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 'எனது உறவினர், நான் பிறப்பதற்கு முன் பயங்கரவாத செயலில் ஈடுபட்டதற்கு நான் எவ்வாறு பாதிப்படையமுடியும்? இதில் நான் செய்த தவறு என்ன இருக்கிறது எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதையடுத்து, 'இது வழக்கமான நடைமுறை தான். அந்த சிறுமிக்கு பாஸ்போர்ட் வழங்குவது தொடர்பாக அதிகாரிகள் சட்டத்திற்குட்பட்டு நியாயமான முறையில் செயல்படுவார்கள்' என்று ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா கூறியிருந்தார்.
இதனையடுத்து, சுஃபைரா ஜானின் பாஸ்போர்ட் விவகாரம் தொடர்பாக விரைந்து செயலாற்றிய அதிகாரிகள் அவருக்கு புதிய பாஸ்போர்ட்டை வழங்கினார்கள். பாஸ்போர்ட் கிடைத்தாலும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்திற்குள் அமெரிக்காவில் உள்ள பள்ளியில் சேர வேண்டுமென்பதால் இந்த அரிய வாய்ப்பை அச்சிறுமி இழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment