(எஸ்.அஷ்ரப்கான்)
கிரேன்பாஸ் பள்ளிவாயல் மீதான தாக்குதல் இனவாதம் அதன் உச்சக்கட்டத்தை
நோக்கிச்சென்று கொண்டிருப்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது என அகில
இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் விடுத்துள்ள அறி்க்கையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது விடயமாக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயலாளர் நாயகம்
வை.எல்.எஸ். ஹமீட் விடுத்துள்ள இவ்வறிக்கையில் மேலும்
தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எந்தவொரு சமூகத்தையும் அவர்கள் எண்ணிக்கையில் குறைந்தவர்கள் என்பதற்காக
அடக்கியாள முற்படுவது அடிமட்ட முட்டாள்தனமாகும்.
யுத்த வெற்றியின் மமதை தலைக்கேறி பித்துப்பிடித்திருப்பதை இந்நிகழ்வுகள்
காட்டுகின்றன. ஆனால் அவ்வாறு பித்துப்பிடிப்பது பைத்தியத்தின் ஒரு
வடிவம். எனவே, பைத்தியத்திற்கு வைத்தியம் அங்கொடயில் இருக்கின்றதே தவிர
கிரேன்பாசிலும், மஹியங்கணையிலும் இல்லை என்பதை சம்மந்தப்பட்டவர்கள்
புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு சமூகம் அமைதியாக தாம் வாழுமிடத்தில் ஒரு வணக்கஸ்தலத்தை அமைத்து
வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவது அடுத்தவர்களுக்கு எந்த விதத்தில் பாதிப்பு
என வினவுகின்றோம். வணக்க வழிபாடுகளில் ஈடுபடாமல் குடித்துவிட்டு
பாதைகளில் சுற்றித்திரிவதனை இந்த காவியுடை இனவாதம் ஆதரிக்கின்றதா ?
என்றும் கேட்க விரும்புகின்றோம்.
அராஜகத்தின் உச்சத்தைத்தொட்ட ஹிட்லரும், முசோலினியும் அடையாளம்
தெரியாமல் அழிந்து போனது மட்டுமல்லாமல் தமது நாடுகளையும் அடுத்தவர்களிடம்
பறிகொடுத்ததுதான் வரலாறாகும். எனவே அராஜகம் ஒருபோதும் நிலைக்கமாட்டாது.
பொறுமையே மிகப்பெரிய ஆயுதம். ஆனால் அந்தப் பொறுமைக்கும் எல்லையுண்டு.
பொறுமை பொறுமையை இழக்கும்போது அராஜகங்களும் அடாவடித்தனங்களும் அதன்
காலடியில் வீழ்ந்த வரலாறுகளை மீட்டிப்பார்க்குமாறு இந்த இனவாதிகளை
வேண்டுகிறோம்.
கிரான்பாஸ் பள்ளிவாயலை இனவாதக்கும்பல் தாக்குகின்றபோது அங்கு
பாதுகாப்பு கடமையில் இருந்த பொலிஸார் அசமந்தமாக
செயற்பட்டிருக்கின்றார்கள். எனவே, அவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை
எடுக்க வேண்டும். அத்தோடு இத்தாக்குதலில் சம்மந்தப்பட்ட அனைத்து
காடையர்களையும் உடனடியாக சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும்.
நாட்டுக்கு வருகைதர இருக்கின்ற நவநீதம்பிள்ளையும், நடைபெற இருக்கின்ற
பொதுநலவாய மாநாடும் அதனை அடுத்து நடைபெற இருக்கின்ற ஜெனீவா
கூட்டத்தொடரும் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளை தம் நிகழ்ச்சி
நிரலில் அல்லது தம் அவதானத்தில் முக்கிய இடம்கொடுக்கின்றபொழுது நாட்டின்
நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
எனவேதான் தாமதியாது இந்த அநியாயத்தில் சம்மந்தப்பட்டவர்களுக்கு எதிராக
நடவடிக்கை எடுப்பதோடு மஹியங்கணை பள்ளிவாசலையும் விரைவாகத்திறக்க
வேண்டும். அதே நேரம் நாடு பூராகவும் உள்ள பள்ளிவாயல்களுக்கு உரிய
பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றோம்.

0 comments :
Post a Comment