(எம்.பைஷல் இஸ்மாயில்)
கிராண்ட்பாஸ் சுவர்ணசயித்திய வீதியில் அமைந்துள்ள பள்ளிவாசல் மீதான தாக்குதலுடன் நாடளாவிய ரீதியில் இந்தப்பள்ளியுடன் இதுவரை 23 வது தாக்குதலாகும். இந்தச் சம்பங்கள் யாவும் நாட்டில் கடந்த பல மாதங்களாக சங்கிலித் தொடராக நிகழ்ந்து வரும் வன்முறைச் சம்பவங்களாகும்.

இந்த சம்பவங்கள் யாவும் மிக சமீப காலமாக அடாவடித்தனமான முறையிலேயே தாக்குதலை மேற்கொண்டு வருகின்றனர். இச்செயலினை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாததும், சகித்துக்கொண்டு இருக்க முடியாததுமாகும். என்று அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தனது கண்டனத்தையும், கவலையையும் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் தவிசாளர் அன்ஸில் மேலும் தெரிவிக்கையில்,
பள்ளிவாசல்கள் மீது தாக்குதல்கள் நடத்துவதற்கு எவருக்கும் அதிகாரம் கிடையாது. அதேபோன்று அதற்கான அதிகாரத்தையும் யாராலும் வழங்கவும் முடியாது. இத்தகைய தாக்குதகளால் எமது நாட்டில் மூவின மக்களிடத்தில் நிலவுகின்ற இன ஐக்கியத்துக்கு பெரும் பங்கத்தை ஏற்படுத்துகின்றன என்பது மட்டும் இதன் மூலம் மிக தெட்டத்தெளிவாக நாம் அறிந்து கொள்ளக்கூய வகையில் அமைந்து காணப்படுகின்றன.
இருந்த போதிலும் இத்தாக்குதல் குறித்து கவனம் செலுத்த வேண்டியவர்கள் இச்செயலினை கண்டும், காணதவர்கள் போன்று வாய் திறக்காமல் மௌனித்திருக்கின்றர். அது மாத்திரமல்லாமல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறும்போது பாதுகாப்பு தரப்பினர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமலும் இருந்து வருகின்றனர். அதனால் அங்கு விபரீதமான நிலைமை தோன்றி மிகப்பாரிய இணக்கலவர மோதல்களும் இடம்பெற வழிவகுக்கின்றனர்.
இந்த நிலைமைகள் தொடர்ந்தும் செல்லுமாக இருந்தால் நமது நாட்டின் பல பாகங்களிலும் மிகப் பயங்கரமான இன மத மோதல்கள் தோன்றும் சாத்தியம் இன்று காணப்படுகின்றது. அதுமாத்திரமல்லாமல் பொதுமக்களிடத்தில் ஒரு நின்மதியற்ற கூ10ழலில் ஒரு இறுக்கமான செயற்பாடுகளுக்கும் மத்தியில் வாழும் நிலை ஏற்படும்.
இன்று பள்ளிவாசல்கள் மீதும், முஸ்லிம்கள் மீதும் நடத்தப்படுகின்ற தாக்குதல்கள் மிக வெளிப்படையானவைகளாக இருக்கின்ற நிலையில்தான் நாம் ஏனைய நாடுகளுக்கு இந்நாட்டில் ஜனநாயகமும், இன ஐக்கியமும் இருப்பதாக கூறப்படுகின்றது.

ஜனநாயகம் இருப்பதாக கூறப்படுவதில் எமக்கு சிறிதளவும் நம்பிக்கைகிடையாது. தெற்கிலே இவ்வாறு தாக்குதல்கள் நடத்தப்படுகின்றதை பார்க்கையில் வடக்கில் நடத்தப்பட்ட தாக்குதல்களை எவ்வாறு மூடிமறைக்க முடியும். அங்கு எந்தளவில் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கின்றது என்பதை நாம் இப்போது உணரக்ககூடியதாக இருக்கின்றது.
எது எவ்வாறு இருப்பினும் பள்ளிவாசல்கள் தாக்கப்படும் பின்னணியில் பாரியதொரு மாற்று சக்தி செயற்பட்டு வருகின்றது என்பது மட்டும் இங்கு மிக தெட்டத்தெளிவாக நாம் அறிந்து கொள்ளக்கூடியதாக அமைந்து காணப்படுகின்றது. குறித்த பள்ளிவாசலானது நோன்பு பெருநாள் நிறைவு பெற்றதன் பின்னர் மூடப்படும் என்று முதலில் கூறப்பட்டிருந்தது.

எனினும் இவ்விடயம் தொடர்பில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து பள்ளிவாசலை மூடுவதற்கான எந்தத் தேவையுமில்லை என்று அறிவிக்கப்பட்டதையடுத்தே இந்தக் குழப்பம் எழுந்துள்ளது.
பள்ளிவால்களை பாதுகாக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களின் கடமையாகும். அதனை நாம் நன்றாக செய்து வருகின்ற அதேவேளை, பாதுகாப்பு தரப்பினரும் இதில் கடமைகளை சரிவர செய்ய வேண்டும்.
எனவே, நாடளாவிய ரீதியில் பள்ளிவாசல்கள் தொடராக தாக்கப்பட்டு வரும் இவ்விடயங்களில் அரசாங்கம் அதற்காக வேண்டி இறுதியானதும், மிகத் தெளிவான முடிவினை எடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருக்கின்றது. கிராண்ட்பாஸ் சம்பவத்தையடுத்து ஜனாதிபதி நேரடி தலையீடுகளை மேற்கொண்டிருந்தமை வரவேற்றக் கூடியதாகும்.

இது இவ்வாறிருக்க இலங்கையில் நடைபெறவிருக்கும் பொதுநலவாய மாநாட்டில் முஸ்லிம் நாடுகள் பங்கேற்பதை தடுப்பதற்காகவே சில தீய சக்திகள் செயற்பட்டு வருகின்றன. இதனையும் அரசாங்கம் நன்கு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றார்.
0 comments :
Post a Comment