இது குறித்து றிஸானாவின் தாய் றுபினா தெரிவித்துள்ளதாவது: -நான் இன்னும் எனது மகள் றிஸானாவின் கவலையிலிருந்து மீளவில்லை. இந்த நேரத்தில் எனக்கு இனந் தெரியாத சில தொலைபேசி இலக்கங்களிலிருந்து உங்களுக்கு எத்தனை வீடு கட்டி தந்திருக்கின்றார்கள்? எத்தனை கோடி ரூபாக்கள் உங்களது வங்கி கணக்கிள் வைப்பில் இடப்பட்டுள்ளன என்றெல்லாம் கேட்கப்படுகிறது.
தொலைபேசி அழைப்புக்கள் வந்து என்னையும் எனது கணவரையும் மேலும் கவலையடையச் செய்யும் வண்ணம் உள்ளது.
எமது நாட்டு அரசியல்வாதிகளும், தனவந்தர்களும்,பொதுமக்களும் இன மத பேதங்களுக்கு அப்பால் உதவி செய்திருக்கின்றார்கள். அத்தோடு இலங்கை இராணுவத்தினரால் வீடொன்று அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனை நானும் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் மற்றையவர்கள் நினைப்பது போன்று இறைவன்மீது ஆணையாக கோடி கணக்கான ரூபாக்கள் எமக்கு வரவில்லை.
எனவே தான் எனது மகளை நினைத்து இறைவனிடத்தில் பிரார்த்தனை செய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் எமது குடும்பத்தை மேலும் கவலையடையச் செய்ய வேண்டாமென உரையாடிய போது கவலையோடு தெரிவித்தார்.
0 comments :
Post a Comment