பேரினவாத தலைவர்கள் சிலரின் மிலேச்சத்தனமான செயல் வெட்கமாக இருக்கிறது-உதுமாலெப்பை

(ஏ.எல்.ஜனூவர்)

க்கள் மத்தியில் சமாதானத்தையும், இன ஐக்கியத்தையும் ஏற்படுத்த வேண்டிய பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மதத்தலைவர்கள் சிலர் முஸ்லிம்களின் பள்ளிவாசல்களை தலைமை தாங்கி தாக்குவது குறித்து இலங்கை மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டிய விடயமாகும். இந்த மிலேச்சத்தனமான செயல்களை அனுமதிக்க முடியாது.

கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவையின் பேச்சாளருமான எம்.எஸ். உதுமாலெப்பை

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை கல்விப்பணியகம் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் அனுசரணையுடன் நடாத்தும் கிழக்கு மாகாண ஆரம்ப பிள்ளைப்பருவ கல்வி அபிவிருத்திக்கான கற்பித்தலுடனான செயற்பாடுகள், ஆசிரியர்களுக்கான வழிகாட்டல் கல்வி தொடர்பான கோட்பாடுகளும், பின்னணிகளும் நூல்களின் அறிமுகம் 2013.08.13ஆம் திகதி மட்டக்களப்பு ஈஸ்ட் லகுன ஹோட்டலில் கிழக்கு மாகாண முதலமைச்சரின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் தலைமையில் இடம் பெற்றது. பிரதம அதிதியாக கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீட் அவர்கள் கலந்து கொண்ட விழாவில் கௌரவ அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே மாகாண அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

எல்லா மதங்களும் ஏனைய சமய மக்களுடன் ஐக்கியமாக வாழ வேண்டும் எனக் கூறிய போதிலும் அண்மைக்காலமாக இலங்கை முஸ்லிம்களின் பள்ளிவாயல்களை பெரும்பான்மை இனத்தைச்சேர்ந்த மதகுருமார்கள் சிலர் தலைமை தாங்கி தாக்குகின்ற நிலைமையை நாம் பார்க்கின்ற போது இலங்கை மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டியதாக உள்ளது. இந்த மிலேச்சத்தனமான செயல்களை நாம் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது.

இலங்கை நாடு பல்லின மக்கள் வாழும் நாடாகும். ஜனநாயக முறைப்படி தத்தமது மார்க்க வழிபாடுகளை சுதந்திரமான முறையில் மேற்கொள்ளக்கூடிய நிலைமை இருக்க வேண்டும். இலங்கையில் வாழும் முஸ்லிம் மக்களும், சிங்கள மக்களும் நீண்ட காலமாக ஐக்கியமாகவே வாழ்ந்து வருகின்றோம். இவ்வாறு ஒற்றுமையாக வாழ்ந்து வந்த முஸ்லிம், சிங்கள மக்களுக்கிடையில் இனவாதத்தை உருவாக்கி நிரந்தரமாகவே இரண்டு சமுகங்களையும் பிரித்துவிட சில இனவாத சக்திகள் தொடர்ச்சியாக முஸ்லிம் மக்களை கேவலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் அனைத்து சமுகங்களுக்கும் பொதுவான ஒரு இறைவனே உள்ளான். நாம் வௌ;வேறு பெயர்களை வைத்து வழிபட்டுக்கொண்டிருக்கின்றோம். எங்களின் புனித இஸ்லாம் மதம் யுத்தம் செய்யும் வேலையில் கூட சகோதர மதத்தலைவர்களை கண்டால் அவர்களுக்கு மரியாதை செலுத்துங்கள், சகோதர வணக்கஸ்தலங்களைக் கண்டால் மரியாதை செலுத்துங்கள் என்றுதான் கூறியுள்ளது. நமது கடந்த கால வரலாற்றுப் பின்னணியைப் பார்க்கும் போது நமது பிராந்தியத்தில் சமுகங்களுக்கிடையில் ஏதாவது பிரச்சினைகள் வரும் போது நாம் மதத் தலைவர்களிடம் சென்று முறையிட்டு பிரச்சினைகளுக்கு சமாதானமான முறையில் தீர்வுகளைக்கண்டு வந்துள்ளோம்.

இனவாதத்தை உருவாக்கியவர்கள் இனவாதத்தால் அழிந்து போன வரலாற்றை நாம் நமது கண்ணால் கண்டுள்ளோம். எங்கள் இஸ்லாம் மதத்தில் பாதிக்கப்பட்வர்களின் பிரார்த்தனைகள் தங்கு தடையின்றி இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள்தான்; என்று குறிப்பிடப்பட்டுள்ளது தவிர முஸ்லிம்கள், தமிழர்கள், பௌத்தர்கள், கிறிஸ்தவர்கள் என்று குறிப்பிடவில்லை. அண்மைக்காலமாக முஸ்லிம்களின் பள்;ளிவாசல்கள் தாக்கப்படுவதனாலும் முஸ்லிம்களுக்கு எதிரான செயற்பாடுகள் காரணமாகவும் முஸ்லிம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன் மன வேதனைப்பட்டவர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.

முஸ்லிம்களின் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக்கொள்வான் என்ற நம்பிக்கையுடன் தான் வாழ்ந்து வருகின்றோம். நமது கிழக்கு மாகாணத்தில் யுத்தம் நீங்கி தற்போது நிலவுகின்ற அமைதி ஏற்படுவதற்கும் பாதிக்கப்பட்ட மக்களின் பிரார்த்தனைகள் இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படவைகள் என்ற யதார்த்தத்தினை நாம் மீட்டிப்பார்க்க வேண்டியவர்களாக உள்ளோம்.

நமது கிழக்கு மாகாணத்தில் கடந்த மூன்று தசாப்த காலமாக யுத்தம், இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்;ட போது தியாக மனப்பாங்குடன் நமது இளம் செல்வங்களை எவ்விதமான எதிர்பார்ப்புகளும் இன்றி சிறந்த பிரஜைகளாக உருவாக்குவதற்கு நமது கிழக்கு மாகாண பாலர் பாடசாலை ஆசிரியர்கள் பெரும் பணி புரிந்துள்ளார்கள்.

 இதற்காக நாம் எப்போதும் அவர்களை பாராட்ட கடமைப்பட்டுள்ளோம். நமது பிள்ளைகளின் ஆரம்ப கல்விக்கு உரம் ஊட்டிய பாலர் பாடசாலைகளில் தியாக மனப்பாங்குடன் கடமை புரியும் ஆசிரியர்களின் விபரங்களை கூட கடந்த பல வருட காலமாக பெறமுடியாத நிலைமையில் நாம் இருந்தோம்.

கிழக்கு மாகாணத்திற்கென தனியான மாகாண சபை உருவாக்கப்பட்டு முதன் முதலாக கடந்த 2008ம் ஆண்டு நடைபெற்ற கிழக்கு மாகாண சபைத்தேர்தலின் மூலம் மக்கள் பிரதிநிதிகளின் நிருவாகம் உருவானது. கிழக்கு மாகாணத்தின் முதலாவது முதலமைச்சராக திரு. சந்திரகாந்தன் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவருடைய தலைமையிலான கிழக்கு மாகாண அரசாங்கம் மூவின மக்களும் ஒற்றுமையாக வாழ்வதற்கான அடித்தளத்தை இட்டு இன ஐக்கியத்தை உருவாக்கியது.

வட, கிழக்கு மக்களின் அரசியல் தீர்வாகவே மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. வட, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நடைபெற்றதனால் வட, கிழக்கு மாகாணங்கள் தவிர மற்ற ஏழு மாகாணங்களும் மாகாண சபை முறையினால் பயன் பெற்று வந்துள்ளன. கிழக்கு மாகாண சபையின் வயது ஐந்தாகவுள்ள நிலையில் சிலர் மாகாண சபை முறையினை முற்றாக ஒழித்து விட வேண்டும் எனக்கூறி இனவாதத்தினை விதைத்து வருகின்றமை கண்டிக்கத்தக்க விடயமாகும்.

நான் கிழக்கு மாகாண சபையில் திரு. சந்திரகாந்தன் தலைமையில் இயங்கிய மாகாண அமைச்சரவையில் அமைச்சராகவும், புதிய முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜிட் அவர்களின் தலைமையிலான தற்போதைய அமைச்சரவையின் அமைச்சர் என்ற வகையில் சில உண்மைகளை தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்.

கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன் அவர்கள் முதன்முதலாக கிழக்கு மாகாண முன்பள்ளி பாடசாலை பணியகத்தினை பல சவால்களுக்கு முகம் கொடுத்து உருவாக்கினார். 

புதிதாக ஒரு விடையத்தை ஆரம்பிக்கும் போது பல சவால்களை எதிர் நோக்க வேண்டி ஏற்படும். பாலர் பாடசாலை பணியகத்தின் தலைவர் உட்பட அதிகாரிகள் கடந்த ஐந்து ஆண்டு காலமாக வேகமாக செயற்பட்டு கிழக்கு மாகாணத்தில் உள்ள பாலர் பாடசாலைகளை முதன் முதலாக பதிவு செய்துள்ளதுடன் பாலர் பாடசாலை ஆசிரியர்களின் விபரங்களை திரட்டியுள்ளதுடன் டிப்ளோமா பயிற்சிகளையும் நடாத்தி பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கான கற்கை நெறி நூல்களை வழங்கும் நிலைக்கு வளர்ச்சியடைந்துள்ளதனை பார்க்கும் போது மனதிக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 

கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தினை உருவாக்கிய முன்னாள் முதலமைச்சர் சந்திரகாந்தன், பாடசாலை பணியகத்தின் தவிசாளர், அதிகாரிகள் ஆகியோரை பாராட்டுகின்றேன்.

புதிய முதலமைச்சர் நஜிப் அப்துல் மஜிட் அவர்களும் அமைச்சின் அதிகாரிகளும் தொடர்ந்தும் இப்பணியகத்தை வளர்த்து எடுப்பதில் பங்காற்றி வருவதனை பாராட்டுகின்றேன். கிழக்கு மாகாண பாலர் பாடசாலைகளில் 3700 ஆசிரியர்கள் கடமையாற்றுகின்றார்கள். இவர்களுக்கு மாதாந்த விசேட கொடுப்பனவாக 3000 ரூபா வழங்குவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையில் தீர்மானம் எடுத்தோம். 

இதற்கு சுமார் 90 மில்லியன் ரூபாய் தேவைப்படுகின்றது. இதற்கான நிதியினை வெளிநாட்டு நிதி மூலம் பெற வேண்டும் இல்லை எனில் கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தினை ஏதாவது ஒரு அமைச்சின் கீழ் கொண்டு வந்து அரசாங்க பாலர் பாடசாலைகளாக உள்வாங்கி ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கும் முறையினை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பெற்றோர்களின் அரவணைப்பில் வீட்டில் வளரும் ஐந்து வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை ஆரம்ப கல்விக்காக பாலர் பாடசாலை ஆசிரியர்களிடம் கையளிக்கின்றோம். நமது செல்வங்களை விதை போன்று அவர்கனை நல்ல ஆளுமை உள்ளவர்களாக உருவாக்கும் பணியில் ஈடுபடுகின்றார்கள். புண்ணியம் கிடைக்கக்கூடிய வகையில் பாலர் பாடசாலை ஆசிரியர்கள் செயற்படுகின்றார்கள்.

ஆசிரியர் பதவி வாழ்வில் எல்லோருக்கும் கிடைப்பதில்லை மாணவர்கள் மீது உண்மைக்கு உண்மையான அன்பு வைத்து முறையாக கற்பித்தலில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு இறைவனின் உதவி கிடைக்கும். இவ்வாறான ஆசிரியர்களின் பிள்ளைகளை இறைவன் தானாகவே அவர்களை உயர்ந்த நிலைக்கு உருவாக்கியிருப்பான் இதுதான் யதார்த்தமாகும்.

தற்போது நமத கிழக்கு மாகாணத்தில் ஒழுக்க விழுமியங்கள் அதிர்ச்சி தரக்கூடிய வகையில் மாறுபட்டு வருகின்றது. நமது ஒவ்வொரு மதமும் நாம் பின்பற்றும் இறைவனுக்கு அடுத்ததாக நமது தாய், தந்தைகளை மதிக்க வேண்டும் என்று கூறுகின்றது. பெற்றோர்களின் ஆசிர்வாதம் இல்லை என்றால் எமது வாழ்வில் ஜனாதிபதி பதவி கிடைத்தாலும் நாம் நிம்மதியாக வாழ முடியாது.

அண்மையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னாள் கல்விப்பணிப்பாளர் ஒருவரின் குடும்பத்தை சேர்ந்த ஒரு பாடசாலை மாணவி தனது காதலுக்கு எதிராக இருந்த தாய், தகப்பனை காதலன் ஊடாக கொலை செய்ததுடன் கொலை செய்யப்பட்ட தனது தகப்பனின் கண்கள் இரண்டையும் தனது கையில் வைத்து பார்த்த செய்தி கேட்டு நாம் இன்னும் மெய் சிலிர்க்கின்றோம். இவ்வாறான கொடுமையான நிகழ்வுகள் எதிர் காலத்தில் நடைபெறாமல் இருப்பதற்கு ஏற்றவாறு பாலர் பாடசாலை மட்டத்தில் இருந்து நமது பிள்ளைச் செல்வங்களை மனித நேயமுள்ள பிரஜைகளாக உருவாக்குவதோடு தியாக மனப்பாங்குடன் தொடர்ந்து பாலர் பாடசாலை ஆசிரிய ஆசிரியர்கள் பணிபுரிய வேண்டும். என மக்கள் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். உங்களின் எதிர் காலம் தொடர்பாக கிழக்கு மாகாண சபையின் ஊடாக முடியுமான பங்களிப்பினை மேற்கொள்வோம்.

நமது கிழக்கு மாகாண மக்களின் கல்வி, சுகாதாரம் போன்ற துறைகளின் வளர்ச்சிக்கு பல கோடி ரூபா நிதியினை வழங்கி வரும் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்திற்கு கிழக்கு மாகாண மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன். என குறிப்பிட்டார்.

இந் நிகழ்வில் பிளான் ஸ்ரீலங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி எட்வாட் நெட் எஸ்பி, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான எம்.எல்.ஏ. அமீர், முகம்மது சிப்லி, கிழக்கு மாகாண பாலர் பாடசாலை பணியகத்தின் தவிசாளர் பொன். செல்வநாயகம் உட்பட உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :