எதிர்வரும் 9ம் திகதி ஹன்சிகா மேத்வானிக்கு 22 வது பிறந்தநாள். தனது ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் அனாதை குழந்தைகளை தத்தெடுப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார் ஹன்சிகா.
தத்தெடுக்கும் குழந்தையின் உணவு, துணிமணிகள் முதல் படிப்புவரை அனைத்தும் ஹன்சிகாவின் செலவுதான்.
இதுவரை 22 குழந்தைகளை ஹன்சிகா தத்தெடுத்துள்ளார். 22 வது பிறந்தநாளுக்கு மேலும் ஒரு குழந்தையை தத்தெடுக்க இருக்கிறார்.
இந்த குழந்தைகள் மும்பையிலுள்ள அனாதைகள் இல்லத்தில் வளர்ந்து வருகின்றனர்.
இதுதவிர, 10 புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவுகளையும் அவர் ஏற்க இருக்கிறார். இதற்கு முன் 30 புற்றுநோயாளிகளின் மருத்துவச் செலவுகளை அவர் ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
இவர்களையும் சேர்த்து 40 பேர்களின் மருத்துவ செலவுகளை ஹன்சிகா ஏற்க முன் வந்துள்ளார்.

0 comments :
Post a Comment