வெலிவேரிய சம்பவம் மீண்டும் 19 வயதான இளைஞன் ஒருவர் மரணம்

ம்பஹா, வெலிவேரிய பிரதேசத்தில் இடம்பெற்ற மோதலின்போது படுகாயமடைந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

19 வயதான இவ் இளைஞன் நேற்று (03) இரவு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.

மோதலின்போது படுகாயமடைந்த இளைஞன் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை மோதலில் படுகாயமடைந்த ஐவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

ரத்துபஸ்வல பகுதியில் குடிநீரில் இரசாயன திரவியம் சேர்வதாகவும் அதற்கு காரணமான தொழிற்சாலையை மூடுமாறும் வலியுறுத்தி மக்கள் கடந்த முதலாம் திகதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது அங்கு சென்ற பாதுகாப்பு படையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலின்போது 17 வயதான மாணவன் உயிரிழந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :