100 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குகிறேன்’மன்னர் அப்துல்லாஹ்

ஐ. நா. தீவிரவாத எதிர்ப்பு மையத்திற்கு சவூதி 100 மில். டொலர் நன்கொடை
ஐ.நா. சபையின் தீவிரவாதத்திற்கு எதிரான மையத்திற்கு சவூதி அரேபிய மன்னர் மேலும் 100
மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த 2011 இல் ஐ.நாவால் நிறுவப்பட்ட இந்த மையத்திற்கு எண்ணெய் வளம் கொண்ட நாட்டின் மன்னர்
ஏற்கனவே 10 மில்லியன் டொலர்களை வழங்கி இருந்தார்.

‘சவூதி மன்னரான நான் ஐக்கிய நாடுகள் சபையின் குடையின் கீழ் இருக்கும் இந்த மையத்துடன்
ஒத்துழைப்புடன் செயற்பட 100 மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்குகிறேன்’ என்று மன்னர்
அப்துல்லாஹ் நேற்று தே மன்னர் இந்த
அறிவிப்பை விடுத்தார்.

அத்துடன் குரோதம், தீவிரவாதம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க சர்வதேசம் இந்த மையத்திற்கு
ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் அவர் கோரினார்.

கடந்த 2005 – 2003 ஆண்டுகளில் சவூதி அரேபியாவில் அல்கொய்தா ஆயுதக் குழு தொடர்ச்சியாக
நடத்திய தாக்குதல்களை தொடர்ந்தே இவ்வாறான ஒரு மையத்தை உருவாக்கும் சிந்தனை சவூதி
மன்னருக்கு தோன்றியது. 

சவூதி தீவிரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு அதிக
முக்கியத்துவம் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :