அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை

(எம்.பைஷல் இஸ்மாயில்)

ம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கையை தற்போது ஆரம்பித்துள்ளது என நெல் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் எம்.கே.எம்.ரத்நாயக்க தெரிவித்தார்.

அம்பாறை மாவட்ட பொத்துவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, தமண, சம்மாந்துறை மற்றும் அம்பாறை ஆகிய பிரதேசங்களிலுள்ள நெல் சந்தைப்படுத்தும் களஞ்சியசாலைகளிலிருந்தே இவ்வாறு இந்த நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், இவ்வாறு கொள்வனது செய்யப்பட்டு வரும் நாடு நெல் ஒரு கிலோ 32 ரூபாவுக்கும், சம்பா நெல் ஒரு கிலோ 35 ரூபாவுக்கும் அரசாங்க கட்டுப்பாட்டு விலைக்கே இந்த நெல்வகை கொள்வனவு செய்யப்படுகின்றது.

இவ்வாறு கொள்வனவு செய்யப்படும் இந்த நெல்லினங்களை ஒரு விவசாயிடமிருந்து 5,000 கிலோ என்ற அடிப்படையில் நெல் கொள்வனவு செய்யப்பட்டு வருவதாகவும் நெல் சந்தைப்படுத்தும் சபையின் அம்பாறை பிராந்திய முகாமையாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை தனியார் வியாபாரிகள், நெல் உரிமையாளர்கள், விவசாயிகளிடமிருந்து தனியார் அரிசி ஆலைககள் உள்ளிட்டவை ஒரு கிலோ நெல் 22 ரூபா முதல் 23 ரூபா வரைக்கு நெல்லை கொள்வனவு செய்யும் நடவடிக்கையை சந்தைப்படுத்தும் சபை மேற்கொண்டு வருவதாகவும் அம்பாறை மாவட்ட விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :