சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் நோன்புப் பெருநாள் போட்டி



( எஸ்.அஷ்ரப்கான் )

சாய்ந்தமருது பிளைங் ஹோர்ஸ் விளையாட்டுக் கழகத்தின் 32வது ஆண்டு
நிறைவையொட்டி புனித நோன்புப் பெருநாள் தினத்தில் நேற்று (09) முதல்
தடவையாக பட்டம் விடும் போட்டியும், கலை, கலாச்சார
விளையாட்டு போட்டிகளும் சாய்ந்தமருது பிளைங்ஹோர்ஸ் விளையாட்டுக்கழகத்தின்
ஏற்பாட்டில் சாய்ந்தமருது கடற்கரை பௌஸி ஐக்கிய விளையாட்டு மைதானத்தில சிறப்பாக இடம்பெற்றது.

கழகத்தின் தலைவரும் கல்முனை மாநகர சபை உறுப்பினருமான ஏ.ஏ. வஸீர்
தலைமையில் இடம்பெற்ற இந்த விளையாட்டு நிகழ்ச்சிகளை கழகத்தின் ஆயுட்காலச் செயலாளர் எஸ். முஹம்மட்கான் நெறிப்படுத்தினார்.

கயிறு இழுத்தல் போட்டி, சங்கீதக்கதிரை, சிறுவர்களுக்கான கிரிக்கெட்,
முட்டி உடைத்தல் போன்றபல போட்டிகள் இங்கு இடம்பெற்றன.
பட்டம் விடும் போட்டியில் 1ஆம், இடத்தைப்பெற்ற வீரருக்கு மூவாயிரம்
ரூபாவும், 2ஆம், 3ஆம் இடங்களை பெற்றவர்களுக்கு முறையே இரண்டாயிரம், ஆயிரம் ரூபாய்களும் வழங்கிவைக்கப்பட்டதுடன், கலை, கலாச்சார போட்டிகளில் வெற்றிபெற்ற சிறுவர்களுக்கும் பரிசில்களும்
வழங்கிவைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் ஓய்வுபெற்ற அதிபர் ஐ.எல்.ஏ. மஜீட், ஓய்வுபெற்ற
விளையாட்டுத்துறை விரிவுரையாளர் எம்.ஐ.எம். முஸ்தபா, சமூர்த்தி
அபிவிருத்தி உத்தியோகத்தர் எம். காலிதீன், உட்பட ஊடகவியலாளர்களான
யு.எம்.இஷ்ஹாக், எம்.ஐ.எம்.அஸ்ஹர் ஆகியோரும் விளையாட்டுக்கழகத்தின்


உறுப்பினர்கள் மற்றும் பிரதேச சிறுவர், சிறுமியர்களும் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :