கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களை கௌரவித்தலும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரியின் 80ஆவது அகவை பூர்தி விழாவும் ஞாயிற்றுக்கிழமை களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் நடைபெற்றது.
களுவாஞ்சிகுடி கிராமத் தலைவரும் முகாமை ஆலய பரிபாலன சபைத் தலைவருமான அ.கந்தவேள் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்ததுடன் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோ.கருணாகரம் (ஜனா) ஞா.கிருஷ்ணபிள்ளை (வெள்ளிமலை) இ.துரைரெட்ணம், பி.இந்திரகுமார் ஆகியோர் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வின்போது அதிதிகள் மலர் மாலை அணிவிக்கப்பட்டு வரவேற்கப்பட்டதோடு கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் அவர்களுக்கும், 80 அகவை கொண்டாடும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி அவர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment