பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடன் இடம்பெறவிருந்த சந்திப்பை ரத்து செய்த கோத்தபாய ராஜபக்ச

பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவுடன் இடம்பெறவிருந்த சந்திப்பை இலங்கையின் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ரத்து செய்துள்ளார்.
இந்த சந்திப்பு ஏற்கனவே ஏற்பாடு செய்யப்பட்டிருந்த போதும் அது இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக இலங்கையில் தங்கியுள்ள பிரித்தானிய நாடாளுமன்றக்குழு நேற்று கொழும்பில் சந்திப்புக்களை நடத்தியது. 

அமைச்சர்களான பசில் ராஜபக்ச, ரவூப் ஹக்கீம், ஜி.எல்.பீரிஸ் ஆகியோரை இந்தக் குழுவினர் சந்தித்தனர். 

இதேவேளை தங்காலையில் 2011ம் ஆண்டில் இடம்பெற்ற பிரித்தானிய பிரஜை ஒருவரின் கொலை தொடர்பில் விரைவான விசாரணைகள் நடத்தப்படும் என்று இலங்கையின் அமைச்சர்கள், பிரித்தானிய குழுவினரிடம் உறுதியளித்துள்ளனர். 

எனினும் இந்த விசாரணைகளில் முன்னேற்றம் இல்லையெனில் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் மாநாட்டின் போது பிரித்தானிய பிரதமர் கேள்வி எழுப்புவார் என்றும் பிரித்தானிய நாடாளுமன்றக் குழுவினர் எச்சரித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :