ஐக்கிய தேசியக் கட்சியின் மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
ஆளும் கட்சியில் இணைந்து கொள்ளும் நோக்கில் இவ்வாறு பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
வடமேல் மற்றும் மத்திய மாகாணத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு ஆளும் கட்சியில் இணைந்து கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதன் பின்னர் மாவட்ட மட்டத்தில் ஜனாதிபதியின் தலைமையில் நடைபெறும் தேர்தல் பிரசாரக் கூட்டங்களின் போது, குறித்த ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆளும் கட்சியுடன் இணைந்து கொள்ள உள்ளனர்.
இதேவேளை, எதிர்வரும் மாகாணசபைத் தேர்தல்களின் பின்னர் மேல் மற்றும் தென் மாகாண சபைகளைக் கலைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

0 comments :
Post a Comment