மாகாணங்களுக்கான அதிகாரங்களை நீக்கும் பிரேணைக்கு மேல் மாகாணசபையும் ஆதரவு

மாகாண சபை அதிகாரங்கள் குறித்து மேல்மாகாண சபையில், முதலமைச்சரால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை அதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மாகாண சபைக்குறிய அதிகாரங்களின் பட்டியலின் கீழ் காணப்படும் சில சில விடயங்கள் தொடர்பாக அதிகாரங்களை நிறுத்தும் போது அல்லது முடிவினை எடுக்கும் போது, பெரும்பாலான மக்களின் கருத்துக்களுக்கு இணங்க எல்லா மாகாண சபைகளின் சம்மதத்தையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற தற்போதைய நிலைப்பாட்டிற்கு அமைவாக, பெரும்பாலான மாகாண சபைகளின் விருப்பங்களுடன் மட்டும் அம்முடிவினை நடைமுறைப்படுத்துவது போதுமானது என அந்தப் பிரேரணையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் நாட்டின் நன்னாதிக்கம், இறமை மற்றும் தேசிய பாதுகாப்பிற்கு தீங்கு ஏற்படாதபடி உரிய நீதியினை வழங்கி, யாப்பு ரீதியாக அதிகாரத்தைப் பெற்றுக் கொடுக்கும், எல்லா மக்களின் ஜனநாயக அதிகாரத்தையும் உச்ச அளவில் உறுதிப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் மாகாண சபை முறையை தொடர்ந்தும் பேனிச் செல்வதற்கு நடவடிக்கை எடுப்பது என அந்தப் பிரேணையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணைக்கு ஆதரவாக 64 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன.

இதன்போது லங்கா சம சமாஜகட்சி, இலங்கை மக்கள் கட்சி என்பன ஆதரவாக வாக்களித்தாகவும், ஐக்கியதேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முண்ணனி என்பன எதிராக வாக்களித்ததாகவும் மேல் மாகாண சபை உறுப்பினர் என். குருபரன் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :