பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு சிறைத் தண்டனை புதிய சட்டம்

யதான பெற்றோர்களை கவனிக்காத பிள்ளைகளுக்கு, சிறைத் தண்டனை அளிக்கப்படும் என்று சீன அரசு அறிவித்துள்ளது.

சீனாவில், கடந்த 2010ம் ஆண்டு எடுக்கப்பட்ட ஆய்வில், 60 வயதைத் தாண்டியவர்களின் எண்ணிக்கை, 17 கோடி என்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, வரும் 2030ல் இருமடங்காக, அதாவது, 34 கோடியாக உயரும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தற்போது, வயதான பெற்றோரை தனியாக விட்டுவிட்டு, தங்கள் குடும்பம், பணி என்று இருக்கும் கலாசாரம் வெகுவாக பரவி வருகிறது. இதைத் தடுக்கவும், முதியவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும், சீன அரசு முடிவு செய்துள்ளது.

பிள்ளைகள், பெற்றோரை தங்களுடன் வைத்து பராமரிக்க வேண்டும்; அல்லது அடிக்கடி சென்று அவர்களை பார்த்துக்கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும், பெற்றோரை கண்டிக்கக்கூடாது. மீறினால், சிறைத் தண்டனை அளிக்கப்படும். இவ்வாறு, சீன அரசின் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மக்கள் எதிர்ப்பு : இந்த உத்தரவு குறித்த தகவல்கள், அந்நாட்டு இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. வயதான பெற்றோரை மதிப்பதாக கூறும் அந்நாட்டு மக்கள், அரசின் இந்த அறிவிப்பை எதிர்த்துள்ளனர்.

மேலும், இப்பிரச்னையை சட்ட ரீதியாக அணுகாமல், உணர்வுபூர்வமாக அணுக வேண்டும், என்றும் கூறியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :