சூரியனின் பிரத்யேக புதிய படத்தை நாசா வெளியுட்டுள்ளது.



சூரியனின் பிரத்யேக புதிய படத்தை நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் வெளியுட்டுள்ளது. இதுவரை ஆராய்ச்சிகளின் மூலம் அதிகம் அறியப்படாத ´இன்டர்பேஸ் ரீஜியன்´ என்னும் பகுதியை ஐரிஸ் என்னும் கருவி படமெடுத்துள்ளது.

இந்த புதிய புகைப்படம் இதுவரை வெளிவராத சூரியனின் பிரத்யேக படமென்பதால் இது பலவிதமான ஆய்வுகளுக்கு உதவியாக இருக்குமென விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

ஐரிஸ் என்றழைக்கப்படும் ´இன்டர்பேஸ் ரீஜியன் இமேஜிங் ஸ்பெகட்ரோ கிராப்´ (short for Interface Region Imaging Spectrograph) மூலம் இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. ஸ்பெக்ட்ரோ கிராப்பில் உள்ள அல்ட்ரா வயலட் டெலஸ்கோப் மூலம் சூரியனின் வெளிப்புற தோற்றம் போட்டோ எடுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

இப்படம் சூரியனுக்குள் 150 கி.மீட்டர் தூரம் ஊடுருவி மிக தெளிவாக எடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் சூரியனின் கடும் வெப்பம் மற்றும் வெளிப்படும் சக்தியையும் விஞ்ஞானிகள் கணிக்க முடியும்.

புதிதாக வெளியிடப்பட்டுள்ள இப்புகைப்படங்களில் மெல்லிய, நூல் போன்ற கட்டமைப்புகள் இருப்பதாகவும், இதுவரை இதுபோன்ற ஒன்றை சூரிய மண்டலத்தில் பார்த்ததில்லை எனவும் நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :