வடபுல முஸ்லிம்கட்கும், அவர்களின் அமைச்சருக்கும் எதிராக பொய் கூறும் இணையம்

(கே.சி.எம்.அஸ்ஹர்)
ண்மையில் தினக்கதிர் எனும் இணையதளத்தில் வெளி மாவட்டத்தைச் சேர்ந்த 4300 முஸ்லிம் குடும்பங்கள் மன்னாரிலும்,வவுனியாவிலும் குடியேற்றம் எனும் தலைப்பில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது.

இதனைப் பார்த்ததும் அறிவியல்  தன்மையோ தர்மமோ, மானிடவிழுமியமோ, மனிதாபிமானமோ இதில் இல்லை என்பதை நான்அறிந்துகொண்டேன்.

ஊடகதர்மம் என்றால் என்ன? என்ற எதுவுமேஅறியாத இக்குழுவினர் யாரோ ஒரு இனவாததுவேசசிந்தனைபரப்பும் குழுவினரின் மறைமுகஆதரவின் அடிப்படையில் செயற்பட்டு வருகின்றனர்.இவர்கட்கும் வடக்கில் முஸ்லிம்கட்குஎதிராகச் செயற்படும் அரசியல்வாதிகட்கும்;; நெருங்கியதொடர்பு உண்டு.

முஸ்லிம்கள்,ஆயுததாரிகள்,கொலைகாரர்கள்,காமுகர்கள்,கடத்தல்காரர்கள்,சுரண்டுபவர்கள்,நிலத்தை அபகரிப்பவர்கள்,எனவும் முஸ்லிம் அமைச்சரைஅடாவடித்தன அமைச்சர் எனவும் செய்திகளைவெளியிட்டுவருகின்றனர்..இவர்கட்குசரியானபதிலடிகொடுக்கவேண்டிய பொறுப்பு முஸ்;லிம்; எழுத்;தாளர்களுக்குஉண்டு.

இனி இவர்களின் செய்;திகளைஆராய்வோம்;..இரவோடிரவாகவெளிமாவட்டத்தைச்; சார்ந்த 4300 குடும்பத்தினர்குடியேற்றப்படவுள்ளார்களாம்...ஷ.இவர்கள்; வெளிமாவட்டத்தவர்கள் அல்ல.என்பதைமுதலில் புரிந்துகொள்ளுங்கள்.உங்களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் 23 வருடங்களாகபுத்தளத்திலும்,ஏனைய பகுதிகளிலும் வாழ்;ந்துவருவதுஉங்களுக்குப்புரியவில்லையா?இவர்களின் தாயகம் திரும்பும் உரிமையையாராலும் விpமர்சிக்கவோ,தடுக்கவோ முடியாது..

முஸ்லிம்கட்கு அதிக பாலியல் ஊக்கம் இருப்பதாகவும் இதையிட்டுமாற்றினப்பெண்கள் அஞ்சுவதாகவும் செய்தி எழுதப்பட்டுள்ளது.ஊடகங்களைப்பார்த்தால் அனைத்து இனத்தவர்களும் பாலியல் குற்றங்;களில்ஈடுபடுவதையும் சட்டத்தால் தண்டிக்கப்படுவதையும்; அறியக்கூடியதாக உள்ளது.

நிலைமை இப்படி இருக்கும்போதுமுஸ்லிம்களைமட்டும் எப்படி குற்றம் சுமத்துவது.முஸ்லிம்கட்குஒழுக்கமானகுடும்;பவாழ்;க்கையை இஸ்லாம் போதித்துள்ளது.இதை அறியாமல் வீண்விமரிசனம் செய்யாமல்உங்கள் கலாசாரத்;தை நீங்கள் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.

15000 வாக்குகள் பதியப்பட்டுள்ளதாம்.வடக்கின் முஸ்லிம் வாரிசுகளின் வாக்குகள் வடக்கில்; பதியப்படுவதில் எந்தக்குற்றமும்; இல்லையே.வழங்கப்படவுள்;ள 4300 காணித்துண்டுகளில்; குறிpப்பிடட்ட வீதம் தமிழ்க்குடும்பங்;களுக்கும் வழங்கப்படவுள்ளது.வடமாகாணத்தில் முஸ்;லிம்கள் இல்லாதிருந்தகாலப்பகுதியில் பல்லாயிரக் கணக்கானகாணித்துண்டுகள் தமிழ் மக்களுக்கும்,அவர்களின் வழிபாட்டுத்தலங்களுக்கும் வழங்கப்பபட்டதைமறந்;துவிடட்;டீர்களா?வழிபாட்டுத்தலங்களுக்கு பல ஹெக்ரேயர்நிலங்கள் உண்டு.பள்ளிவாயல்களுக்கு எத்தனை ? ஏக்கர் நிலமுண்டு.

புத்தளத்தைப் பூர்வீகமாகக்கொண்டஎந்தவொரு மகனும் வடக்கே சென்று குடியேறவிரும்பமாட்டான்.என்பதை இன்னும் நீங்கள் ஏன் ?புரியவில்லை.கிளிநொச்சியிலும்,முல்லைத்தீPவிலும் புத்தளத்தைச் சேர்ந்த 300 ஆசிரியர்கள் நிpயமிக்கப்பட்டுள்ளதாகவும்,மன்னாரையும்,வவுனியாவையும்; முஸ்;லிம் மாவட்டமாகமாற்;றும்முயற்சிநடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.அறியாமைத்தனமான ஒரு செய்தியாகவே இதை நான்; காண்;கிறேன்.

தகுதியற்றோருக்குஆசிரியர்நியமனம் வழங்கப்படுகிறதாம்? ஆசிரியர் தொழிலுக்கென்று ஒரு அடிப்படைத்தகைமை உள்ளது .அதனடிப்படையிலேயேஆசிரியர்கள் தெரிவுசெய்யப்படுகின்றனர்.உரிய ஆசிரியர் சேவைப்பயிற்சியும் உரியகாலத்தில் வழங்கப்படும் .இந்த நியமனங்கள் தமிழருக்கும்வழங்கப்பட்டுள்ளதை ஏன்? மறந்துவிட்டீர்கள்.

வடக்கின் தமிழ் மக்களையும்,முஸ்லிம் மக்களையும் சமமாகநேசிக்கும் ஒரேதலைவரே அமைச்சர் றிசாத் பதியுதீன் அவர்கள் .அவர் தனது சாணக்கியத்தின் மூலம் அரசிடமிருந்து வடபுல முஸ்லிம் மக்களுக்கும்,தமிழ் மக்களுக்கும் காணிகள்,வீடுகள்,தொழில்வாய்ப்புக்கள் ,வீதிவசதிகள்,சுகாதாரவசதிகள்,விவசாய,மீன்பிடிஉதவிகள்.நிவாரணஉதவிகள் என நூற்றுக்கணக்கானதை செய்து வருகிறார்.

இவரின் சுயநலமற்றசேவைக்கு முஸ்லிம்களும்,தமிழர்களும் சாட்சிகளாயுள்ளனர்.நிலைமை இப்படி இருக்கும்போதுஅமைச்சரை எப்படி அடாவடிஅமைச்சரெனக்குறிப்பிடுவீர்.ஆகவே ,நச்சுவிதைகளைத் தூவும் உங்கள் முயற்சிகளை நிறுத்திக்கொள்ளவும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :